‘தடையற்ற மின்சாரம்’ தேர்தல் ஆணையம் கோரிக்கை

தேர்தல் நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரி தமிழக மின்வாரியத்துக்கு தேர்தல் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து நிருபர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போதும், வாக்குகள் எண்ணும்போதும் மின்சாரம் மிகவும் அவசியம். அதனால் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி தமிழ்நாடு மின்வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இருப்பினும், அவசரத் தேவைக்காக ‘எமர்ஜென்சி’ விளக்குகளை தயாராக வைத்திருக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு கருவிகள் செயல்பட மின்சாரம் தேவையில்லை.

இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE