சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு அவர்களின் தனிமையைப் போக்கும் நண்பனாக இருக்க முடியும் என்பதை புழல் சிறைச்சாலை வளாகத்துக்குள் கைதிகளுக்காகவென்று பிரத்தியேகமாக நடத்தப்பட்ட புத்தகக் காட்சி நிரூபித்துள்ளது.
புத்தகக் காட்சி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யும்படி தமிழ் நாடு நூல் மேம்பாட்டு குழுமத்தை சிறைத்துறை கேட்டுக்கொண்டது. இதனையொட்டி மூன்று நாட்கள் நடைபெற்ற புத்தகக் காட்சி கடந்த சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது.
இலக்கியம், வரலாறு, தமிழ்மொழி சார்ந்த நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள் மற்றும் சுகாதாரம் என இதில் 1500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இங்கு 30 சதவீத தள்ளுபடி விலையில் இங்கு புத்தகங்கள் கிடைத்தன.
புழல் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் வி.ருக்மணி பிரியர்தர்ஷிணி இதுகுறித்து தெரிவிக்கையில்,
சிறைக் கைதிகளுக்காக முதன்முறையாக ஒரு பிரத்யேக புத்தகக் காட்சி நடத்துவதென நாங்கள் தீர்மானித்தோம். பெரும்பாலும் சிறைச்சாலைக்குள் கைதிகள் தனிமையில் இருக்கிறார்கள் அவர்களுக்கு நேரமும் இருக்கிறது. அவர்களிடையே வாசிப்பை ஊக்குவிப்பதுதான் எங்கள் நோக்கம்.
இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் சிறைச்சாலைக்குள் நடத்தப்பட்ட இந்த புத்தகக் காட்சியில் சிறைக்கைதிகளே ஸ்டால்களை பார்த்துக்கொண்டார்கள்.
ஆனால் இதில் பணப் பரிமாற்றம் இல்லாமல் வியாபாரம் நடைபெறும்விதமாக ஏற்பாடு செய்திருந்தோம். எப்படியென்றால் கைதிகளுக்கென்று உள்ள ‘கேஷ் பிராபர்ட்டி அக்கவுண்ட்’டை பயன்படுத்திக்கொண்டோம். சிறைக்குள்ளேயே அவர்கள் உழைத்து சம்பாதித்து சேர்த்துவைத்துள்ள பணம்தான் அது.
இவ்வாறு சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இப் புத்தகக் காட்சியில் திருக்குறள், திருமந்திரம் போன்ற மறை நூல்களும், ராமாயணம், மகாபாரம் போன்ற இதிகாச நூல்களும், பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் போன்ற கவிஞர்களின் கவிதை நூல்களும் கல்கியின் பொன்னியின் செல்வன், அலைஓசை, புதுமைப்பித்தன், நா.பிச்சமூர்த்தி, ஜெயகாந்தன் போன்ற ஆசிரியர்களின் கிளாஸிக் படைப்புகளும் இதுதவிர சுயமுன்னேற்ற நூலகள் போன்ற நூல்கள் வேகமாக விற்பனையாகின, என்று சிறைத்துறையைச் சேர்ந்த ஓர் உயரதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து சிறைத்துறை உளவியல் நிபுணர் யூ.பாஸ்கரன் கூறுகையில்,
"பல கைதிகள் புத்தகங்கள் படிப்பதன் மூலம் அவர்களின் அறிவை புதுப்பித்து வருகிறார்கள்."
சிறை இலக்கியம் என்றொரு தலைப்பில் தனி ஸ்டால் போடப்பட்டிருந்தது. அதில் நெல்சன் மண்டேலா, காந்தி உள்ளிட்ட அரசியல் பெருந்தலைவர்களின் அனுபவப் பகிர்வு நூல்களும் இடம்பெற்றிருந்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago