ரயில் பாதையில் நடமாடும் ஒற்றை யானையை கண்காணிக்க குழு

குன்னூர் ரன்னிமேடு ரயில் பாதை யில் நடமாடி வரும் கர்ப்பமான யானையை கண்காணிக்க வனத் துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் தற்போது பலா சீசன் தொடங்கியுள்ளதால், பர்லி யாறு வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த யானைகள், காட்டேரி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உலா வருகின்றன. இந்த பகுதி களில் பேரிக்காய் காய்த்துள்ள தாலும், தண்ணீர் மற்றும் யானைகளுக்கு தேவை யான தீவனம் உள்ளதாலும் இந்த யானை கூட்டம் இப் பகுதியிலேயே தஞ்சமடைந்துள்ளது.

யானைகள் முகாமிட்டுள் ளதால், தனியார் எஸ்டேட் மற்றும் டான்டீ தோட்டங்களில் தேயிலை பறிக்கச் செல்ல முடி யாமல் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.

இந்த குடியிருப்புகளுக்குச் செல்லும் பாதை ஒரு வழிப் பாதையாக உள்ளதாலும், யானைகள் பீதியாலும் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், இந்த யானைக் கூட்டம் அவ் வப்போது குன்னூர்-மேட்டுப் பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் ‘ஹாயாக’ உலா வருகின்றன.

திங்கள்கிழமை காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி வந்த நீலகிரி மலை ரயில் பாதையில் ரன்னி மேடு அருகேயுள்ள குகை பகுதி யில் ஒரு யானை தண்டவாளத் தில் படுத்திருந்தது. வன ஊழியர் கள் மற்றும் ரயில்வே ஊழியர் கள் யானையை வனத்தினுள் விரட்டினர். யானை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள் ளது. குன்னூர் சரகர் சிவா உத்தர வின் பேரில் பழங்குடியினர் மற் றும் வன ஊழியர்கள் 10 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த யானையின் நட மாட்டம் ரன்னிமேடு -ஹில் குரோவ் ரயில் பாதை இடையே உள்ளதால், ரயில்வே ஊழியர் களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE