குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது, உரிய நேரத்தில் விடுப்பு கிடைக் காதது, குறைவான சம்பளம் உட்பட 8 முக்கிய அம்சங்கள்தான் போலீஸாரின் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸாரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அருண்ராஜ் (27) என்ற ஆயுதப்படை காவலர் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அதே மாதத்தில் அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார். கொருக்குப்பேட்டையில் சிறப்பு எஸ்.ஐ. ஜோசப் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் பாலமுருகன் (28) என்ற ஆயுதப்படை காவலர் கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
இவ்வாறு கடந்த 2008 முதல் 2017 வரை மொத்தம் 295 போலீ ஸார் தற்கொலை செய்துகொண் டுள்ளனர். இதே காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் பணிக்காலத்தில் 3,032 போலீஸார் மரணம் அடைந்துள்ளனர்.
காவல் துறையில் பணியின் போது நடக்கும் தற்கொலை மற்றும் மரணங்களுக்கு உயரதிகாரிகள் தரும் அழுத்தமே காரணம். இத னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போலீஸாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பணியில் உள்ள போலீஸா ரிடம் கருத்து கேட்க போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, பரவலாக பல போலீ ஸாரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், முக்கியமாக 8 காரணங் களையே பெரும்பாலான போலீ ஸார் கூறியுள்ளனர். அதன் விவரம்:
1. சொந்த மாவட்டத்தில் அல்லா மல், வெளி மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவதால் அந்நிய மாக உணர்கின்றனர்.
2. இதனால் பெற்றோர், மனைவி, குழந்தைகளை விட்டு நீண்ட காலம் பிரிந்திருப்பது.
3. குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், இக்கட்டான சூழ்நிலைகளில்கூட தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு மறுக்கப்படுவது.
4. உரிய நேரத்தில் செல்ல இயலாததால் குடும்பத்தில் பிரச்சினை.
5. பணிச்சுமையுடன், குடும்ப பிரச்சினையும் சேர்வதால், இரண் டிலும் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தம் ஏற்படுவது.
6. இதன் தொடர்ச்சியாக, மது போன்ற போதை பழக்கங்கள் ஏற்பட்டு, அதற்கு அடிமையாவது.
7. பிற துறைகளுக்கு இணை யான சம்பளம் இல்லாததால் ஏற்படும் கடன் சுமை.
8. ஒருசில உயர் அதிகாரிகளின் தொந்தரவு.
இவற்றால்தான் பெரும்பாலும் போலீஸாருக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. அதனால், சிலர் தற்கொலை செய்துகொள்கின்ற னர். சிலர் மன அழுத்தம் அதிகமாகி, மரணம் அடைகின்றனர்.
எனவே, இந்த பிரச்சினைகளை சரிசெய்தால், போலீஸாரின் பணி சூழலோடு, குடும்ப சூழலும் மாறும். முழுமையாக பணியில் கவனம் செலுத்துவதால், அவர் களது பணித் திறனும் அதிகரிக் கும் என்று போலீஸார் தெரிவித் துள்ளனர்.
தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடம் இந்த கருத்து கள் அடங்கிய பட்டியல் கொடுக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக் கப்படும் என டிஜிபி அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago