பேட்டரி வாகனங்களுக்கு மாறும் இந்தியா: ரூ.1,050 கோடியில் 4000-க்கும் மேற்பட்ட சார்ஜர் மையங்கள் அமைக்க இலக்கு

By கி.ஜெயப்பிரகாஷ்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பேட்டரி வாகனங்களை அதிகரிக்க புதிய கொள்கையை உருவாக்கி, திட்டப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு களமிறங்கியுள்ளது. அதன்படி, ரூ.1,050 கோடியில் 4 ஆயிரத் துக்கும்  மேற்பட்ட சார்ஜர் மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்  பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, மாற்று எரிசக்தி மூலம் வாகனங்களை இயக்க  புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.  இருசக்கர வாகனங்கள், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களை பேட்டரி தொழில்நுட்பத்தில் இயக்குவதை  அதிகரிப்பது தொடர்பாக  மாநில அரசுகளுடன் மத்திய அரசு போக்குவரத்து அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பேட்டரி வாகனங்களின் திட்டங்களைக் குறைந்த செலவில் உருவாக்குவது, தரமான சார்ஜர் மையங்கள் அமைப்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலும் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.  தமிழகத்திலும் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை அதிகரிக்க,  அதற்கான திட்டங்களைக் கொண்டு வருவது குறித்து அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரக அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

நாட்டில் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கமத்திய அரசு முடிவு செய்துள் ளது. முதல் கட்டமாக பொது போக்குவரத்து வசதியை இணைக்கும் வகையிலும், அதிக  வாகனபோக்குவரத்து உள்ள இடங்களிலும் வாகனங்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய மின் போக்குவரத்து திட்டத்தின்படி அடுத்த 4 ஆண்டுகளில் 70 லட்சம் பேட்டரி வாகனங்களை இயக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 460-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன.

எந்தெந்த நேரங்களில் எவ்வளவு வாகனங்கள் ஓடுகின்றன,  இதில் கனகர வாகனங்கள், சிறிய வாகனங்களின்  எண்ணிக்கை எவ்வளவு, இந்த வாகனங்களுக்கு சார்ஜர் மையங்கள் அமைத்தால்  எவ்வளவு செலவாகும்? எங்கெல்லாம் சார்ஜர் மையங்களை அமைக்கலாம், சார்ஜர் இருப்பு எவ்வளவு என்பன உள்ளிட்ட விபரங்களைக்கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

நாடுமுழுவதும் ரூ.1050 கோடி செலவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்ஜர் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் முதல்கட்டமாக 20 முதல் 30 சுங்கச்சாவடிகளில் சார்ஜர் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகிறது. சென்னை - பெங்களூரு, மதுரை, கோவை போன்ற முக்கிய சாலைகளில் சார்ஜர் மையங்கள் அமைக்கப்பட்டு  சோதனை முறையில் இயக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் சில இடங்களில் பேட்டரி சார்ஜர் மையங்கள் செயல்படும். 2030-ல் 40 சதவீத வாகனங்கள் பேட்டரி தொழில் நுட்பத்துக்கு மாறும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய சலுகைகள்

பேட்டரி வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் புதிய வகை சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக வழங்கவுள்ளன.  இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் புதியதாக வரும் வாகனங்களில் 90 சதவீத இருசக்கர வாகனங்களும், கார்களும் பேட்டரி தொழில்நுட்பத்தில் ஓடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சென்னையில் 200 பேருந்துகள்

அரசு போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் கூறும்போது, “சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் முதல்கட்டமாக பேட்டரிகள் மூலம் ஓடும் 200 பேருந்துகளை இயக்கவுள்ளோம். டீசல் பேருந்தை விட இவற்றின் விலை அதிகமாக இருக்கும்.  அதாவது, தற்போதுள்ள ஒரு பேருந்தின்  விலை ரூ.26 லட்சமாகும். இதுவே, பேட்டரி பேருந்துகளின் விலை  ரூ.2 கோடி ஆகும்.  ஆனால், 50 சதவீதம் எரிபொருள் செலவு குறையும். பொதுபோக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பேட்டரி பேருந்துகளை இயக்க மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி, ஒரு தொகுப்பு பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ வரை பயணம் செய்யலாம். தியாகராயநகர், பிராட்வே போன்ற இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் பேட்டரி பேருந்துகளை இயக்கவுள்ளோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

2 hours ago

மேலும்