விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கில் விசாரணை வரும் 14-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

விடுதலைப் புலிகள் இயக் கத்துக்கு இந்தியாவில் விதிக் கப்பட்ட தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த பெரும் புதூரில் படுகொலை செய்யப் பட்டார். அதன்பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும். அந்த தீர்ப்பாயம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விசாரணை நடத்தி விடுதலைப் புலிகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்து, அது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். அதனடிப்படையில் மத்திய அரசு தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கும்.

கடந்த 2014- ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் என்ற முறையில் வைகோ நேரில் ஆஜரானார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.டி.பாலாஜி, ‘‘விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடர வைகோவுக்கு உரிமை இல்லை. இந்த உத்தரவை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம்தான் வழக்கு தொடர முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்