நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான நீலகிரி ரிசார்ட்: காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ்

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான தங்கும் விடுதியை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யாத தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சோலூர் கிரமங்களில் யானைகள் வழித்தடங்களில் செயல்படும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 12-ம் தேதி 27 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கபட்டது.

மீதமுள்ள 12 தங்கும் விடுதி உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து முறையிடலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து விடுபட்ட அந்த 12 தங்கும் விடுதிகளுக்கும் சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

குறிப்பாக நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தொந்தமான மொனார்க் தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மற்ற தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணிகள் நடத்து வருகிறது.

அடுத்த 48 மணிநேரத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்