கோவையில் சொகுசு கார் நிலை தடுமாறி பேருந்து நிறுத்தத்தில் பயங்கரமாக மோதியதில், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், பூ விற்ற பெண் உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொள்ளாச்சியிலிருந்து புதன்கிழமை காலை கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அதி நவீன சொகுசு கார் (ஆடி), சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே நிலை தடுமாறியது. அதில், கார் அங்கிருந்த ஆட்டோ மீதும், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த கொடூர விபத்தில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த போலீஸார் இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இருவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார். சொகுசு காரை பறிமுதல் செய்து அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் பேருந்து நிறுத்தத்தில் பூக்கள் விற்பனை செய்துகொண்டிருந்த அம்சவேணி என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களின் விவரங்கள் வெளியாகவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago