அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேனா?- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார விளக்கம்

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக வெளியான செய்திகள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் 10.02.2020க்குள் நிறைவடைகின்றது. அதற்குள் அடுத்த அதிபர் தேர்தல் பற்றிய கருத்துகள் தற்போது இலங்கை அரசியலில் முக்கிய கருப்பொருளாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான சட்டம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் நான்காவது முறையாக அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் போட்டியிட முடியாது என்பதும் ஒரு காரணம்.

அடுத்த அதிபர் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பாக மீண்டும் மைத்திரிபால சிறிசேனாவையே மீண்டும் அதிபர் வேட்பாளராக களமிறக்கவும், மகிந்த ராஜபக்ச அணியிலிருந்து இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் கோத்தபய ராஜபக்சவை களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக களமிறக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

தமிழர்களுக்கு உதவி

குமார் சங்கக்காரவின் தந்தை சொக்சானந்த சங்கக்கார இலங்கையின் கண்டி மாவட்டத்தின் பிரபல வழக்கறிஞரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய உறுப்பினரும் ஆவார். மேலும் சொக்சானந்த சங்கக்கார 1983-ல் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரத்தின் போது பல தமிழர்களை காப்பாற்றியதற்காகவும் அறியப்பட்டவர். இதனால் தமிழ் மக்களின் ஆதரவும் குமார் சங்கக்காரவிற்கு உண்டு.

இம்ரான் கானும், சங்கக்காரவும்

இந்நிலையில் எதிர்வரும் 18.08.2018 அன்று பாகிஸ்தான் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பதவி ஏற்க உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, விரைவில் அரசியலில் களமிறங்கப் போவதாகவும், அதிபர் தேர்தலில் கவனம் செலுத்தப் போவதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.

இந்நிலையில் திங்கட்கிழமை தனது அரசியல் வருகை குறித்து குமார் சங்கக்கார வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நான் அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே. அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போது மட்டுமல்ல, எப்போதும் இருந்ததில்லை'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவரான அர்ஜூன் ரணதுங்கா தற்போது அமைச்சராகப் பதவி வகித்து வருவதும், சனத் ஜெயசூர்யா முன்பு இணையமைச்சராகப் பதவி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்