மதுரையில் மகளின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிடுவேன் என மிரட்டி, பணம் பறிக்க முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகநாத். இவர் நெல்லையிலுள்ள மின்வாரியத்தில் பணிபுரிகிறார். கடந்த 18 ஆம் தேதி மதுரை வந்த அவர், ஆரப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் சென்றார். அப்போது அவருடைய கைப்பை மாயமானது. அதில், 2 செல்போன், 3 கிராம் தங்கத் தோடு, பென்ட்ரைவ், கணினி மோடம், சிம்கார்டு ஆகியவை இருந்ததாக ஆறுமுகநாத் அண்ணாநகர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி ஆறுமுகநாத்தின் செல்போனுக்கு ஒருவர் பேசியுள்ளார். அவர், பேருந்தில் தவறவிட்ட கைப்பை தன்னிடம் இருக்கிறது. ரூ.25 ஆயிரம் கொடுத்தால் தருவேன் என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். மீண்டும், அதே நபர் 6 ஆம் தேதி பேசியபோது, கேட்ட பணம் தராவிடில், “பென்ட்ரைவிலுள்ள உனது மகளின் படத்தை ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் தவறாக வெளியிடுவேன்” என மிரட்டி உள்ளார்.
வேறு வழியின்றி, அந்த நபரை திங்கள்கிழமை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு ஆறுமுகநாத் வரவழைத்தார். இதுபற்றி முன்கூட்டியே அண்ணாநகர் போலீஸாருக்கும் அவர் தகவல் கொடுத்தார். திட்டமிட்டபடி, ஆறுமுகநாத்திடம் பேசிய நபர், தனது நண்பருடன் அங்கு வந்தார்.
ஆறுமுகநாத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அண்ணாநகர் போலீஸார் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் கோச்சடை பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (27), சுந்தரபாண்டியன்(47) எனத் தெரியவந்தது. சம்பவத்தன்று இருவரும் ஆறுமுகநாத்துடன் சக பயணிகள் போன்று நடித்து, அவரது பேக்கை திருடி, பணம் பறிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பென்ட்ரைவ், தங்கத் தோடு உள்ளிட்ட பொருட்களை போலீஸார் கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago