நீ வில்சன் அல்ல ‘வின்’சன் என்ற கருணாநிதியின் வாழ்த்து. மெரினா தீர்ப்பின் வெற்றி மூலம் மீண்டும் கருணாநிதியின் வாழ்த்தை உண்மையாக்கியுள்ளார் வழக்கறிஞர் வில்சன்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டபோது தமிழக அரசு மறுத்தது. இதை எதிர்த்து திமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் திமுக சார்பில் திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். வில்சன் திமுக சார்பில் நடக்கும் வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஆவார்.
வில்சனின் வாதங்களால் திமுக பல வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளது. அப்படி வெற்றிப்பெற்ற ஒரு சந்தர்ப்பத்தில் கருணாநிதியிடம் வாழ்த்துப்பெறச் சென்ற வழக்கறிஞர் வில்சனை அழைத்த கருணாநிதி தனக்கே உரிய பாணியில் “நீ
வில்சன் அல்ல ‘வின்’சன் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
பல வழக்குகளை வாதாடிய வழக்கறிஞர் வில்சன் கருணாநிதியின் உடல் அடக்கம் குறித்த உரிமைக்கோரும் வழக்கில் ஆஜராவோம் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளியது.
5 முறை முதல்வராக இருந்த முதுபெரும் அரசியல்வாதிக்கு மெரினா கடற்கரையில் அனுமதி மறுத்ததை திமுக தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். ஆனாலும் அரசு அசைந்துக்கொடுக்கவில்லை.
இறுதியில் சட்டப்போராட்டம் நடத்த திமுக தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் நடத்த உத்தரவிடக்கோரி தலைமை நீதிபதி(பொறுப்பு) அமர்வு முன் முறையிடப்பட்டது. இந்த வழக்கில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி கடுமையான வாதத்தை எடுத்து வைத்தார்.
இதை எதிர்க்கொள்ள முடியாமல் அரசு தரப்பு திணறியது. அவர்கள் எடுத்துவைத்த வாதம் அனைத்தும் வில்சன் உள்ளிட்டோர் வாதங்களால் தவிடு பொடியாகியது. இறுதியில் கருணாநிதி உடல் அடக்கம் மெரினாவில்தான் என்று தீர்ப்பு வந்தது.
கருணாநிதி ஏற்கெனவே வாழ்த்தியது போல் வில்சன் அல்ல ‘வின்’சன் என்பதை மூத்த வழக்கறிஞர் வில்சன் மீண்டும் நிரூபித்துள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago