‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ சவப்பெட்டி வாசகம்: அன்றே எழுதி வைத்த கருணாநிதி

By மு.அப்துல் முத்தலீஃப்

கருணாநிதி சவப்பெட்டியில் எழுதப்பட்ட வாசகத்தை தீர்மானித்ததும் அவரே. ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகத்தை சவப்பெட்டியில் எழுதவேண்டும் என தனது 'நெஞ்சுக்கு நீதி' நூலின் முகவுரையில் கருணாநிதி கூறினார்.

கருணாநிதி மறைந்தபோது அவரை அடக்கம் செய்ய சவப்பெட்டி தயார் செய்யப்பட்டது. அதில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. சற்றே மரியாதைக் குறைவாக உள்ள இந்த வாசகத்த்தை யார் இப்படிப் பதிவு செய்தது என்ற சந்தேகம் திமுக தொண்டர்களையும் தாண்டி பலரது மனதிலும் எழுந்தது.

கருணாநிதி எழுதிய வாசகம் தான் என்று சிலர் விளக்கம் அளித்தாலும் எந்த சந்தர்ப்பத்தில் அவர் இதை எழுதினார், என்பது பற்றி யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.

கருணாநிதி தனது சவப்பெட்டி மீது இத்தகைய வாசகத்தை எழுதவேண்டும் என்று தீர்மானித்தது அவர் நெஞ்சுக்கு நீதி நூலினை எழுதியபோது என்னுரை என்று முகவுரை எழுதியிருப்பார். அதில் இந்த வாசகத்தை குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி தனது வாழ்க்கை வரலாற்றை 'நெஞ்சுக்கு நீதி' என்று பல தொகுப்புகளாக எழுதியிருந்தார். முதல் பாகம் 1975-ம் ஆண்டு வெளியானது. அதில் தனது பிள்ளைப்பருவம் தொடங்கி தனது அரசியல் வளர்ச்சி, திக, திமுக, திமுகவின் வெற்றி, அண்ணா முதல்வரானது, அண்ணா மறைவு வரை உள்ள பதிவுகளை எழுதியிய்ருப்பார்.

முதல்பாகம் வெளியாகும் முன் நூலுக்கு என்னுரை எழுதியபோது அவர் எழுதிய வரிகள் வருமாறு:

''மனிதன் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்வது என்பது அதிசயச் செய்திகளில் ஒன்று.தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்ப்பவர்களே ஒரு சிலர்தான். அந்த வகையில் பார்த்தால் ஐம்பது வயதைக் கடந்த நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடிந்த நிலையில் என் கடந்தகால வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, 'நெஞ்சுக்கு நீதி' முதல் பாகத்தை எழுதி, இரண்டாம் பாகத்தையும் எழுதினேன்.

இரண்டாம் பாகத்தை எழுதும்போது அறுபது வயதைக் கடந்து இந்த நூல்களுக்கான முன்னுரையை 62-வது அகவையின்போது எழுதுகிறேன். இந்த 62 ஆண்டுகளில் மிகப் பெரும்பகுதி பொதுவாழ்க்கைக்கே செலவாகியுள்ளது என்பது இதயத்திற்கு ஆறுதலைத் தரவல்லதாகும்.

எஞ்சியிருக்கும் நாட்களும் குறிப்பாக மக்கள் பணிக்கே செலவிடப்பட வேண்டும் என்பது தணியாத ஆசை. நடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு “ஏ அப்பா இவ்வளவு தூரம் நடந்துவிட்டோமா? இனிமேல் நடக்க முடியாது” என்று அயர்ந்து போவதைவிட “பரவாயில்லை இவ்வளவு தூரம் நடந்துவிட்டோம், இனி சிறிது தூரம் தானே” என்ற புதிய விறுவிறுப்பைப் பெற்றாக வேண்டும்.

அந்த விறுவிறுப்பைப் பெற்றுதான் என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்துக்கொள்கிறேன். வாழ்க்கை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர். எனக்கோ, போராட்டமே வாழ்க்கையாகி விட்டது. வெற்றி தோல்விகள் இயற்கைதான். எனினும் விடாமுயற்சியும், கொள்கை உறுதியும் ஓயா உழைப்பும் தேவை. ‘ஓய்வெடுத்துக்கொள்க’ என்று சில மாற்றுக்கட்சி நண்பர்கள் கேலியாகக் கூறினார்கள்.

‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன்.''

இவ்வாறு கருணாநிதி  பதிவு செய்துள்ளார்.

அதன்படியே அவர் தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்தும் ஓய்வில்லாமல் உழைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்