காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசு வழங்கினார்.

ஸ்காட்லாந்து நாட்டின், கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சதீஷ்குமார், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகையையும் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற அச்சந்தா ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ், ரூபிந்தர் பால் சிங், ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகையையும் முதல்வர் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: "தமிழகத்தைச் சேர்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் ஏதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு விடுதிகளைக் கட்டுதல், சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை வழங்குதல், போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகை வழங்கிட முதல்வர் ஜெயலலிதா கடந்த 19.12.2011 அன்று ஆணையிட்டிருந்தார்.

இதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம்வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும்; வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாகவும்; வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 23.7.2014 முதல் 3.8.2014 வரை நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார்; ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகிய மூன்று வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை; மேசைப்பந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அச்சந்தா ஷரத் கமல் மற்றும் அந்தோணி அமல்ராஜ்; ஆடவர் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ரூபிந்தர் பால் சிங் மற்றும் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகிய நான்கு வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை; என மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை 7 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்.

மேலும், பரிசுகளைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகளிடம் முதல்வர், “நாங்கள் உங்கள் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறோம். இன்னும் நிறைய வெற்றியை நீங்கள் அடையவேண்டும் என வாழ்த்துகிறேன்" என கூறியதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்