தமிழகத்தில் முதன்முறை; கும்பகோணத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை சீரமைக்க ரோபோட் இயந்திரம்: நகராட்சி நிர்வாக ஆணையர் தொடங்கி வைத்தார்

By வி.சுந்தர்ராஜ்

 தமிழகத்தில் முதன்முறையாக கும்பகோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை சீரமைக்க ரோபோட் இயந்திரம் பரிசோதனை முறையில் இயக்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 2008-09 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் 125.71 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் உள்ளது.

இதன்மூலம் 19,421 வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைத் தவிர்க்க இயலாத நேரங்களில் துப்புரவு ஊழியர்களே இறங்கி சுத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் மூலம் துப்புரவு ஊழியர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழ்நிலை உள்ளது.

இதைத் தவிர்க்கும் நோக்கில் கேரளாவைச் சேர்ந்த விமல் கோபிநாத் குழுவினர் உருவாக்கியுள்ள ரோபோட் மூலம் சுத்தம் செய்யலாம். இதன் விலை 9 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். இவற்றை கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதிப்குமார், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் ஓரு ரோபோட் இயந்திரத்தை வாங்கி கும்பகோணம் நகராட்சிக்கு வழங்கியுள்ளார்.

இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை சனிக்கிழமை காலை கும்பகோணத்தில் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார், நகராட்சி ஆணையர் கே.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்