இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போனோர் பற்றிய விவரம் கோரி கிளிநொச்சியில் 500-வது நாளாக தொடர் போராட்டம்: சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வலியுறுத்தல்

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனோருக்காக கிளிநொச்சியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நேற்று 500-வது நாளை எட்டியது.

இலங்கையில் 1983 முதல் 2009 வரை நடந்த உள்நாட்டுப் போரின்போது சுமார் 20 ஆயிரம் பேர் காணாமல் போனதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் யுத்த காலத்து குடிமக்கள் கணக்கெடுப்பின்படி 1.40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்து போனதாகவோ உறுதி செய்யப்படவில்லை.

ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசையும், தமிழர்களின் படுகொலைகளையும் தீவிரமாக எதிர்த்து கருத்து தெரிவித்த சிங்கள செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட உள்ளிட்ட பல மனித உரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி ராணுவத்தில் சரணடைந்த பலரும் இலங்கையில் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன தங்களது உறவினர்கள் பற்றிய உண்மை நிலையை வெளிப்படுத்த வலியுறுத்தி, இலங்கை கிளிநொச்சியில் உள்ள கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அமைதிப் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த தொடர் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காத நிலையில், இப்போராட்டம் நேற்றுடன் 500-வது நாளை எட்டியது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 8 வடகிழக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட வேண்டும், எங்கள் உறவினர்களுடன் நாங்கள் வாழும் உரிமையை உறுதி செய்ய வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், திருவாடனை எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் கடந்த 6.4.2018-ல் கிளிநொச்சிக்கு சென்று இப்போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இப்போராட்டம் குறித்து அவர் நமது செய்தியாளரிடம் கூறியது: ‘‘இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவோம். காணாமல் போனவர்களை மீட்க, ஐ.நா.வின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது கண்டனத்துக்குரியது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்