புதுச்சேரிக்கு முழு அதிகாரம் வலியுறுத்தி வரும் 20-ம் தேதி எம்எல்ஏக்கள், கட்சித் தலைவர்களுடன் டெல்லி பயணம்: நாராயணசாமி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரிக்கு முழு அதிகாரம் வழங்க வலியுறுத்தி வரும் 20-ல் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளதாக பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தமிழ் தெரிந்த ஒருவரை மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்க வேண்டும் என்று பேரவையில் காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மேலும் இது மாநில உரிமையில் கைவைக்கும் விவகாரம் என்றும் கூறிய நிலையில் அமைச்சர் கந்தசாமி, "இதில் முதல்வர் ஏன் மௌனம் காக்கின்றார். அனைத்துக் கட்சியைப் பலமுறை கூட்டியும் மதிப்பில்லை. அதிகாரம் இல்லையென்றால் அவையை ஒத்தி வைத்துவிட்டு டெல்லி செல்வோம்" என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, ''சந்தர்ப்ப சூழ்நிலையால் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க முடியவில்லை. இது போன்ற நடவடிக்கை வேண்டும் என்றால் முழு அதிகாரம் மாநிலத்துக்கு தேவை. அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் வரும் வெள்ளியன்று (ஜூலை 20) டெல்லி சென்று பிரதமர் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்