ராமேசுவரத்தில் மூன்று மணிநேரம் நீடித்த இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம் கடற்கரைப் பகுதிகளில் வானத்தில் ஏற்பட்ட அபூர்வ நிகழ்வான இந்த நூற்றாண்டின் மிகவும் நீண்ட சந்திர கிரகணத்தை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகப் பார்வையிட்டனர்.

பூமியின் துணைக்கோளான நிலாவுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்காவின் தென்பகுதி உள்ளிட்ட நாடுகளில் சந்திர கிரகணத்தை தெளிவாகக் காண முடியும். இந்திய நேரப்படி ஜூலை 27-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.53 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், ஜுலை 28-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3.49 மணி வரையிலும் சந்திர கிரகணம் நீடிக்கும். இதில் முழு கிரகணம் அதிகாலை 1 மணிக்கு தொடங்கி, அதிகபட்ச கிரகணம் 1.52 மணிக்கு வரையிலும் சுமார் 102 நிமிடங்கள் நிகழும். இதனால் 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் என வானியல் ஆராய்ச்சியாளர்கள குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நூற்றாண்டின் மிகவும் நீண்ட சந்திர கிரகணத்தைக் காண்பதற்காக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு சந்திர கிரகணம் நிகழத் தொடங்கியது. தொடர்ந்து 3 மணிநேரத்திற்கு மேல் நீடித்த சந்திர கிரணத்தை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன் கைபேசிகளில் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர். பாம்பன் பாலம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் வெறும் கண்களாலேயே சூப்பர் நிலவைப் பார்த்து மகிழ்ந்தனர்.

முன்னதாக, சந்திர கிரகணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சாயரட்ஜை பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் அக்னி தீர்த்தக்கடலில் ராமநாதசுவாமி புறப்பாடாகி கிரகண அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்