பொறியியல் படிப்புக்கான கலந் தாய்வை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏற் கெனவே உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வெளி யானதில் காலதாமதம் ஏற்பட்ட தால் மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு, அதன்பிறகு பொறி யியல் படிப்புக்கான பிஇ கலந் தாய்வு ஆகஸ்ட் மாதம் இரண்டா வது வாரம் வரை நடத்தப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர் களுக்கு 196 மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்கி, அந்த மதிப்பெண்ணை சேர்த்து அதன்பிறகு தரவரிசைப்பட்டி யலை வெளியிட வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜூலை 10-ம் தேதி உத்தரவிட்டது. இதனால் மருத்துவ கலந்தாய்வு பாதியில் நிறுத்தப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தர வால் மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போனதால் பொறியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை-க்குள் முடிக்க முடியாத சூழல் இந்த ஆண்டும் ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் கலந்தாய்வை நடத்தி முடிக்க கூடுதல் அவகாசம் கோரி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை வரும் ஆக.31-ம் தேதி வரை நடத் திக்கொள்ள அனுமதியளித்து நேற்று உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago