வட-கிழக்கு மாகாணங்களில் மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும்: இலங்கை அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுமிகள் பாதுகாப்பாக இருக்க, மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவரும், இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார துணை அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சையான கருத்தால் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சுழிப்புரத்தைச் சேர்ந்த 6 வயது தமிழ்ச் சிறுமி, கடந்த ஜுன் 25-ம் தேதி பள்ளி சென்றுவிட்டு திரும்பியபோது திடீரென காணாமல் போனார். இந்நிலையில், அச்சிறுமியின் சடலம் பாழடைந்த தோட்டத்துக் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. அச்சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. சிறுமியின் படுகொலையை கண்டித்து, கடந்த ஒரு வாரகாலமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விஜயகலா மகேஸ்வரன் பேசியதாவது:

அண்மையில், யாழ்ப்பாணத்தில் பள்ளி சென்ற சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எங்களுடைய மக்களை அதிபர் காப்பாற்றவில்லை. ஆனால், அவர் கட்சியை வளர்க்கிறார். எங்களுடைய பிள்ளைகளை பாதுகாக்க வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்தால் நாடாளுமன்றத்தில் நேற்று அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயகலா மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த சபாநாயகர், இன்று (புதன்கிழமை) மதியம் வரை அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்