மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ள இந்நேரத்தில், நீர் மேலாண்மையை சிறப்பாக மேற் கொள்வதற்கான குடிமராமத்துப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி யிருக்க வேண்டும் என்கின்றனர் விவசாய சங்கத் தலைவர்கள்.
கர்நாடகத்தின் காவிரி நீர்பிடிப் புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால், டெல்டா பாசனத்துக்காக ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று பகல் 12 மணி நிலவரப்படி 119.80 அடி (முழு கொள்ளளவு 120 அடி), நீர் வரத்து 72,486 கன அடி. திறக்கப்படும் தண்ணீர் 30,200 கன அடி. அணை நிரம்பிவிட்டதால், நீர் வரத்து தொடர்ந்து அதிக அளவில் இருந்தால், திறக்கப் படும் தண்ணீரின் அளவும் அதிக ரிக்கப்படும்.
காவிரியில் அதன் முழுக் கொள் ளளவையும் தாண்டி அதிக அள வில் தண்ணீர் திறக்க இயலாது என்பதால் கொள்ளிடத்துக்கு மடை மாற்றி விடப்படும் என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.
இதுகுறித்து காவிரி விவசாயி கள் பாதுகாப்புச் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் கூறியது: ‘‘பெருமழை பெய்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் 2005-ல் 145 டிஎம்சி, 2013-ல் 27 டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக வீணாகக் கடலில் கலந் தது. இதுபோன்ற நிலை ஏற்படா திருக்க அரசு கவனத்துடன் நீர் மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், அதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடு களை இதுவரை அரசு மேற் கொள்ளவில்லை.
இந்த நேரத்திலாவது நீர் மேலாண்மையை திட்டமிட்டு செயல்படுத்தினால், அதிக அளவி லான தண்ணீர் கடலில் சென்று வீணாவதை தடுக்கலாம். காவிரி யிலிருந்து பிரியும் முக்கிய ஆறுகளில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீரை எடுத்துச் சென்று அவற்றிலிருந்து பிரியும் கிளை ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களுக்கு கொண்டு சென்று நீர்நிலைகளை நிரப்ப வேண்டும்.
வீராணம் ஏரிக்கும் தண்ணீரை முன்கூட்டியே கொண்டு செல்ல லாம். கடலூர் மாவட்டத்துக்கு செல்லும் தெற்கு ராஜன், வடக்கு ராஜன் வாய்க்கால்களையும் இப்போதே திறந்துவிட்டால், அந்த மாவட்டத்துக்கும் தண்ணீர் சென்று சேரும்’’ என்றார்.
காவிரி டெல்டா மாவட்ட விவ சாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கூறியது:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மட்டும் 2,517 கிலோ மீட்டர் நீளத்துக்கு 36 கிளை ஆறுகள் உள்ளன. இவற்றிலிருந்து 1,665 ஏ பிரிவு வாய்க்கால்கள் 6,900 கிலோ மீட்டர் நீளத்துக்கு உள்ளன. இதுதவிர பி, சி, டி, இ, எப், ஜி வரையிலான பிரிவு வாய்க்கால்கள் ஏறத்தாழ 28,500 உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டு, தூர்க்கப்பட்டு விட்டன. இவைகளை முழுமையாக கண்டறிந்து ஆக்கிர மிப்புகளை அகற்றி, தூர் வாரி தண் ணீரை சேமிக்கும் வழியை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நிலத் தடி நீர்மட்டம் உயரும்.
நீர் மேலாண்மையில் அரசுகள் முறையாக திட்டமிடாததே தமிழ கம், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் பாதிக் கப்படுவதற்கு முக்கியமான காரணம்.
ஜனவரி இறுதியில் மேட்டூர் அணை மூடப்பட்டவுடன், பிப்ரவரி மாதத்தில் குடிமராமத்துப் பணி களை தொடங்கி ஜூன் மாதத்துக் குள் முடிக்க வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் போதுதான் இங்கு தூர் வாரும் பணிகளைத் தொடங்குகின்றனர். இதனால் நிதி வீணாகும், விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago