கட்டிடம் உண்டு; கணினி இல்லை- ஈரோட்டில் பயன்பாட்டுக்கு வராத கிராம சேவை மையங்கள்:சான்றிதழ்களைப் பெற முடியாமல் அவதிப்படும் கிராம மக்கள்

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு மாவட்டத்தில் 224 ஊராட்சிகளில், கிராம சேவை மையத்துக் கான கட்டிடங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்டுள்ள நிலையில், ஒன்றில்கூட கணினி மற்றும் இணைய இணைப்பு செய்து தரப்படவில்லை. 50-க்கும்மேற்பட்ட கட்டிடங்கள் திறப்புவிழா காணாமல் புதர் மண்டிக் கிடக் கின்றன.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, சென்னிமலை, தாளவாடி,பெருந்துறை, கொடுமுடி, மொடக் குறிச்சி, பவானிசாகர், நம்பியூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம் என 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் 225 ஊராட்சிகள் உள்ளன. அரசின் பெரும்பாலான துறைகள் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள்,இருப்பிடம், வருவாய், ஜாதிச்சான் றிதழ், சிட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இணையம் மூலமே விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.

இந்த இணைய சேவை கிராமங் களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காக, ஊராட்சிகள்தோறும், கிராம சேவை மையங்கள் தொடங் கப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி, வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம சேவை மையத்துக்கு கட்டிடங்கள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கு வரவில்லை ஈரோடு மாவட்டத்தில் மொத்த முள்ள 225 ஊராட்சிகளில், 224 ஊராட்சிகளில் கிராம சேவை மையங்களுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இதுவரை திறப்பு விழா காணாமல், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன. ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தப் படாமல் இருப்பதால், முட்புதர்கள் மண்டி இக்கட்டிடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. சில இடங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இந்த கட்டிடங்கள் மாறியுள்ளன. திறக்கப்பட்ட கட்டிடங்களி லும், மகளிர் சுய உதவிகுழுக்களைச் சேர்ந்தவர்கள், எப்போதாவது கூட்டம் நடத்த மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

கணினி வசதி, இணைய வசதி ஆகியவை செய்து தரப்படாததால்,இந்த மையங்கள் எந்த நோக்கத் துக்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல், கோடிக்கணக்கான ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் சேவைகள் மற்றும் சான்றிதழ் களைப் பெற நகரப்பகுதிகளுக் குச் சென்று விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது: ‘‘நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், முழுமையாக செயல்படுத்தப் படாமல் உள்ளது. கிராம சேவை மைய கட்டிடம் கட்டுவதில் ஆர்வம் காட்டியவர்கள், வசதிகளை மேம்படுத்தி, திட்டத்தை செயலாக்கு வதில் ஏன் காட்டவில்லை என்று புரியவில்லை. ரூ.16 லட்சத்தில் கட்டிடத்தை கட்டிவிட்டு, அதனுள் கணினி, இணைய இணைப்பு உள்ளிட்ட சில ஆயிரம் செலவில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல் இருக்கின்றனர். எனவே, கிராம மக்களுக்கு இணைய வழிச் சேவைகள் கிடைக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து ஈரோடு ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநரிடம் பேசியபோது, ‘‘224 ஊராட்சிகளில் கிராம சேவை மையத்துக் கான கட்டிங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், 198 மைய கட்டிடங்கள் மின் இணைப்பு பெற்று மகளிர் திட்டப் பிரிவினரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. மீதமுள்ள 26 கட்டிடங்களுக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளோம். அடுத்த 20 நாட்களில், இவை மகளிர் திட்டப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு நாங்கள் ஒப்படைக் கும் கட்டிடங்களில், மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கொண்டு சேவை மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. கிராமங் களில் இ - சேவை மையம் அமைத்து, அப்பகுதி மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம் என்றாலும், பல இடங்களில் இதனைச் செயல்படுத்துவதில் இடர்பாடுகள் உள்ளன. கிராம சேவை மையங்களுக் காக கட்டப்பட்ட கட்டிடங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த விரும்பினால், ஆட்சியரின் அனுமதியோடு அதனைச் செய்ய முடியும்’’ என்றார்.

மகளிர் திட்டப்பிரிவு அதிகாரிகளி டம் பேசியபோது, ‘‘எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட 198 கட்டிடங்களில், 162 கட்டிடங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்களின் பயிற்சி முகாம், கூட்டங்கள் நடத்த இந்த கட்டிடங்கள் பயன்படுத்தப்படு கிறது. கணினி, இணைய இணைப்பு வசதிகள் இதுவரை செய்து தரப்படாததால், இ- சேவை மையங்களாக அவை இயங்கு வதில்லை’’ என்றனர்.ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேர்மாளம் கிராமத்தில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மையம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்