தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இப்பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை பதினோரு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 436-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலை வழிபாட்டுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலி முடிந்ததும் பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஆயர் ஏற்றிவைத்தார்.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் திருவுருவ பவனி ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பேராலயப் பங்குத்தந்தை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்