பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள்: உதவித்தொகையுடன் செய்முறை பயிற்சி அளிக்கிறது அரசு நிறுவனம்

By டி.செல்வகுமார்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வசதி யாக சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய பனைப் பொருட் கள் பயிற்சி நிறுவனம் உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கிறது.

இந்தியாவில் இருந்த 6 கோடியே 50 லட்சம் பனைமரங் களில், தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடியே 50 லட்சம் பனை மரங்கள் இருந்தன. இப்போது 3 கோடியே 50 லட்சம் பனை மரங்கள் மட்டுமே உள்ளன. அந்நிய நிறுவனங்களின் வரவால், பனைப் பொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளது. இந் நிலையில், மாதவரத்தில் செயல்படும் மத்திய பனைப் பொருட்கள் பயிற்சி நிறுவனம், பனைப் பொருட்களை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி விற்பது குறித்து இரண்டு மாதம் பயிற்சி அளிப்பதுடன், நபர் ஒருவருக்கு ரூ.1,400 உதவித் தொகையும் வழங்கி ஊக்குவித்து வருகிறது.

பதநீர் கிடைக்கும் காலங்களில் ஒரு லிட்டர் பதநீர் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. பனை வெல்லம், பனங் கற்கண்டு, பனஞ்சீனி, பனஞ்சீனியில் இருந்து சாக்லேட் உள்ளிட்ட மிட்டாய் வகைகளைத் தயாரித்து விற்கின்றனர். இது தவிர, கழிவைக் காசாக்குதல் (Waste to Wealth) என்ற அடிப்படையில், பனைமட்டை, குருத்தோலையில் இருந்து 30 வகையான நவநாகரீகப் பொருட்கள், பனைஓலையில் இருந்து கூடை, முகவரி அட்டை, திருமண அழைப்பிதழ், வாழ்த்து அட்டைகள், மாலை, பூங்கொத்து, குப்பைக்கூடை உட்பட 120 வகையான பனைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதுகுறித்து மத்திய பனைப் பொருட்கள் பயிற்சி நிறுவனத் தின் முதல்வர் டி.எம்.பாண்டியன் கூறியதாவது:

பனை மற்றும் பனைப் பொருட்களின் மகத்துவத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பனைப் பொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றுவது குறித்து உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிப்பது, தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகாட்டி, வங்கி நிதியும் கிடைக்கச் செய்வது, இந்தியா முழுவதும் உள்ள 7 ஆயிரம் கதர் பவன்கள் (தமிழ்நாட்டில் மட்டும் 800 கதர் பவன்கள்) மூலம் பனைப் பொருட்களின் விற்பனைக்கு வழிவகை செய்வது ஆகியவற்றின் மூலம் கிராமப்புற மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எங்கள் பயிற்சி நிறுவனத்தின் நோக்கமாகும்.

சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பயிற்சி அளிக்கிறோம். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள 21 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்கு பனைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பனைப் பொருட்கள் தயாரிப்பு மட்டுமல்லாமல் தையல் கலை, அழகுக் கலை, தொங்கட்டம் உள்ளிட்ட செயற்கை ஆபரணங்கள், நாப்கின் தயாரிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். சூரியஒளித் தகடு பதித்தல், ஏசி மெக்கானிக், கணினி வன்பொருள், மென்பொருள், செல் போன் பழுதுபார்த்தல், தேனீ வளர்ப்பு போன்ற பயிற்சியும் உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது.

பயிற்சி முடித்தவர்கள் தொழில் தொடங்க விரும்பினால் ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வங்கிக் கடனுதவி 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். தமிழ்நாட்டில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதற்கு மாற்றாக பனைப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ப தால் மக்களுக்கு அவரவர் சொந்த ஊர்களிலேயே பனைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு பாண்டியன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்