காடுகளில் கிடைக்கும் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தின் விற்பனையை மாநில வன ஆராய்ச்சி நிலையம் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இன்று தொற்றல்லாத நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் உயிரிழப்புகளில் 61 சதவீதம் பேர் தொற்றல்லாத நோய்களால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறையும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
அதனால் அண்மைக் காலமாக இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை உணவுகள் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இயற்கை முறையில் வளர்க்கப்படும் மாடித் தோட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த முறைக்கு முக்கிய இடு பொருளாக இயற்கை உரங்கள் உள்ளன.
தற்போது இயற்கை உரங்களின் விற்பனை முக்கிய சந்தை யாக மாறி வருகிறது. பல்வேறு உள்ளாட்சிகளில் குப்பைகளில் இருந்து இயற்கை உரங்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. இந்த சந்தையை கைப்பற்ற பல புதுமைகளைப் பன்னாட்டு நிறுவனங் கள் புகுத்தி வருகின்றன. இந் நிலையில், இந்த சந்தையில் மாநில வன ஆராய்ச்சி நிலைய மும் களமிறங்கியுள்ளது. இந் நிலையம் சார்பில் கிலோ ரூ.20 விலையில் செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தின் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில வன ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
அண்மையில் கண்காட்சி ஒன்றில் பன்னாட்டு நிறுவனத்தின் செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தைப் பார்க்க நேர்ந்தது. அதை எங்கள் ஆய்வகத்தில் ஆய்வு செய்தபோது, உரப் பையில் குறிப்பிட்டவாறு நுண்ணுயிர்கள், அந்த உரத்தில் இல்லை. அதன் விலை கிலோ ரூ.110. இந்நிலையில் இதுபோன்ற உரத்தை தரமாக தயாரிக்க திட்டமிட்டோம். பின்னர் வனத்துறையின் அனுமதி பெற்று, வனங்களில் கிடைக்கும் இலைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து, அதில் சூடோமோனாஸ், பேசில்லஸ், ரைசோபியம், அசோஸ்பைரில்லம், வேம் ஆகிய நுண்ணுயிர்களைச் சேர்த்து செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தை தயாரித்து விற்று வருகிறோம். இது இயற்கை உரச் சந்தையில் புதிய தொழில்நுட்பம். ஒரு கிலோ ரூ.20 விலையில் கிடைக்கிறது. இந்த மண்புழு உரத்தில் நுண்ணுயிர்களைச் சேர்ப்பதால், காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சி, மண்ணில் சேமித்து, பயிர்கள் செழிப்பாக வளர உதவுகின்றன.
இந்த உரம், நகர்ப்புறங்களில் மாடித்தோட்டம் வைத்திருப்போர், இயற்கை வேளாண்மை யில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதைப் பெற 044 22750297 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இந்த உரம் குறித்து, மண்ணியல் ஆராய்ச்சியாளர் ஒருவரி டம் கேட்டபோது, “செறிவூட்டப்பட்ட மண்புழு உரங்களை விற்கும்போது, உரத்துடன் சேர்க்கப்பட்ட நுண்ணுயிர்களின் அளவு எத்தனை நாட்களுக்கு குறையாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்து, உரப்பையிலேயே தெரிவிக்க வேண்டும். ஒரு இயற்கை விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு டன் உரம் தேவை என்றால், ரூ.20 ஆயிரம் கொடுத்து வாங்க முடியாது. அவர்களுக்கு மலிவு விலையில் கொடுக்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago