இலங்கை முல்லைத்தீவில் 500-வது நாளுடன் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நிறுத்தம்: ஐ.நா. சபை தலையிட வலியுறுத்தல்

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 08.03.2017 அன்று தொடங்கப்பட்ட உள்நாட்டுப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் புதன்கிழமையோடு 500-வது நாளை எட்டியது. 500-வது நாளுடன் தொடர் போராட்டத்தை நிறுத்தி மாதம் ஒருநாள் தீர்வு கிடைக்கும்வரை போராடப்போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் 1983-ம் ஆண்டு முதல் 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக ஐநா மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசையும், தமிழர்கள் படுகொலைகளையும் தீவிரமாக எதிர்த்து கருத்துகளை வெளியிட்ட செய்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி ராணுவத்தில் சரணடைந்த பலரும் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்தாகவோ உறுதி செய்யப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களை மீட்பதற்காக அவர்களின் உறவினர்கள் இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவில் கடந்தாண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் புதன்கிழமையோடு 500-வது நாளை எட்டியது. 500-வது நாள் போராட்டம் முல்லைத்தீவு ஆட்சியர் அலுவலகம் எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 8 வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பேரணியாக வந்து கலந்துகொண்டனர்.

''காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை அரசு வெளியிடவேண்டும், ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தரவேண்டும், சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்'' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

500-வது நாளோடு தொடர் போராட்டத்தை நிறுத்தி மாதம் ஒருநாள் தீர்வு கிடைக்கும்வரை போராட்டப்போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்