சென்னை: “நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஓர் உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.
பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கழக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அந்தப் பதவியில் திருச்சி சிவாவையும் நியமித்தார்.
» விடைத்தாள் மதிப்பீட்டு பணி: ஏப்.19 விடுமுறை அளிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
» 'கட்சிப் பதவி பறிப்பு போதாது; பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' - ஜி.கே.வாசன்
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்தார். ஆனால் அந்த சந்திப்பின் விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், ‘மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.' என பொன்முடி கூறியுள்ளார்.
இதற்கிடையில், பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ஏப்ரல் 15-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது. அதேபோல், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள திமுக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வரும் 16-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago