சேலத்தில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி: பல லட்சம் மதிப்பிலான நகை- பணம் தப்பியது

By வி.சீனிவாசன்

 சேலத்தில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடைபெற்றதை அறிந்த பொதுமக்கள் ஓடிவந்ததால் , அதை பார்த்த கொள்ளையர்கள் தப்பியோடினர். இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை-பணம் தப்பியது

இதுதொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:

சேலம் சூரமங்கலம் ஜாகீர் ரெட்டிபட்டி காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகமத்துல்லா .இவரது மனைவி குர்ஷித் பேகம். கணவன், மனைவி இருவரும் வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்து வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்தனர்.

வீட்டில் சத்தம் வருவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொது மக்கள் வருவதை பார்த்த கொள்ளையர்கள் 3 பேரும் சுவர் ஏறி குதித்து இருளில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததையடுத்து பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் தப்பின. கொள்ளை முயற்சி நடந்த வீடு பிரபல சினிமா இசையமைப்பாளர் தாஜ்நூரின் சகோதரி குர்ஷித் பேகம் வீடு என்பது குறிப்பிடதக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்