‘பனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்’ - குமரி அனந்தனுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: பனையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திய குமரி அனந்தனின் முயற்சி என்றென்றும் நினைவு கூறப்படும் என்று கம்யூனிட்ஸ்ட் கட்சிகள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளன.

குமரி அனந்தனின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதவது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் (93) இன்று (ஏப்.9) அதிகாலையில் சென்னையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் 1933 மார்ச் 19-ம் தேதி பிறந்த குமரி அனந்தன், அண்ணல் காந்தி மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டவர். காங்கிரஸ் பேரியக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்து செயல்பட்டவர். பெருந்தலைவர் காமராசரின் அணுக்க தொண்டராக வளர்ந்தவர். இதன் காரணமாக 1977-ம் ஆண்டு நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்களவையில் பணியாற்றிவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செயல்பட்ட குமரி அனந்தன், அதன் அரசியல் முடிவுகளில் மாறுபட்டு காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை நிறுவியவர். இதன் மூலம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு 19 ஆண்டுகள் செயல்பட்டவர். பிறகு காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைத்து, இறுதி வரை காங்கிரஸ் தொண்டராக செயல்பட்டவர்.

பனை தொழிலாளர் வாரியத் தலைவர் பொறுப்பில் இருந்து, பனையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால்பட்டவர். தலைசிறந்த பேச்சாளர். “இலக்கிய செல்வர்” என்ற சிறப்பு பெற்று விளங்கியவர். நதிகள் இணைப்பு, மதுவிலக்கு, தமிழ் மொழி வளர்ச்சி கொள்கைகளில் வாழ்நாள் முழுவதும் தளர்வில்லாமல் போராடி வந்தவர். சாதி, மதவெறி, வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக சமரசம் காணாது போராடி வந்த ஜனநாயகவாதி.

மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது பல முறை நடைபயண இயக்கத்தை (பாத யாத்திரை) மேற்கொண்டு, மக்கள் கவனத்தை ஈர்த்து, அரசின் கொள்கை முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியவர்.
மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனின் பொது வாழ்வுக்கு பாராட்டு தெரிவித்து தமிழக அரசு கடந்த ஆண்டு (2024) தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டுப்பற்றும், மக்கள் நலனும் இருகண்களாக கொண்டு வாழ்ந்த, அப்பழுக்கற்ற தேச பக்தரை நாடு இழந்து விட்டது. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்: அதேபோல் குமரி அனந்தனின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேசப்பற்று மிக்கவருமான இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் முதிர்ந்த தேசியவாதியாகவும், ஆற்றல் வாய்ந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். பண விடைத்தாளை தமிழில் கொண்டு வருவதற்காகவும் , பனை மரத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காகவும் அவர் ஆற்றிய பணி என்றென்றும் நினைவு கூறப்படும். தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக அதிகமான முறை நடைபயணத்தை மேற்கொண்டவர்.

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற அவர் மதச்சார்பற்ற சக்திகளுடன் எப்போதும் நெருக்கமாக இருந்தார். அரசியல் மேடைகளில் இலக்கியச் சுவையோடு பேசும் அவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயல்பட்டார்.

அவரை இழந்து வாடும் காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்