ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: மூத்த வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் 10 மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் வழங்​காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலை​வருக்கு பரிந்​துரை செய்​தது சட்​ட​விரோதம் என்று உச்ச நீதி​மன்​றம் முக்​கிய தீர்ப்பை அளித்​துள்​ளது. இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்​கறிஞர்​கள் தெரி​வித்த கருத்து:

மூத்த வழக்​கறிஞர் கே.எம்​.​விஜயன்: இதில் புதிய விஷ​யம் ஒன்​றும் இல்​லை. அரசி​யலமைப்​பு சட்​டம் என்ன சொல்​கிறதோ அதைத்​தான் உச்ச நீதி​மன்​ற​மும் தனது தீர்ப்​பில் கூறி​யுள்​ளது. ஆனால், இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் மட்​டுமின்றி மற்ற மாநில ஆளுநர்​களுக்​கும் ஒரு கடி​வாளம் போட்​டுள்​ளது. கூடிய விரை​வில்’ என்ற ஒற்றை வார்த்​தையை வைத்​துக்​கொண்டு ஆளுநர்​கள் இனி நாள் கணக்​கில் கோப்​பு​களை​யும், மசோ​தாக்​களை​யும் கிடப்​பில் போட முடி​யாது.

ஏற்​கெனவே சட்​டப்​பிரிவு 356 என்ற ஆட்சி கலைப்​புக்​கான ஆயுதத்தை ஆளுநர்​கள் தங்​களது இஷ்டம்​போல பயன்​படுத்த முடி​யாது என்​ப​தை​யும் உச்ச நீதி​மன்​றம்​தான் தெளிவுபடுத்​தி​யது. தற்​போது மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசுக்கு சட்​டம் இயற்​றும் அதி​காரம் உள்​ளது என்​ப​தை​யும், ஆளுநர்​களுக்கு ஏதேச்​சை​யான அதி​காரம் இல்லை என்​ப​தை​யும் இந்த தீர்ப்பு உறு​திபடுத்​தி​யுள்​ளது.

ஆளுநர்​களுக்கு காலக்​கெடு நிர்​ண​யம் செய்​திருப்​பது வரவேற்​புக்​குரியது. அரசி​யல் ரீதி​யாக​வும், மக்​களின் நலன் சார்ந்​தும் சட்​டம் இயற்ற மாநில அரசுகளுக்கு இனி எந்த தடை​யும் இருக்​காது.

மூத்த வழக்​கறிஞர் ஜி.​கார்த்​தி​கேயன்: அரசி​யலமைப்​பு சட்​டப் பிரிவு​கள் குறித்த சந்​தேகங்​கள் எழும்​போது, அது தொடர்​பாக வழக்கை 3 நீதிப​தி​கள் கொண்ட அமர்​வு​தான் விசா​ரிக்க வேண்​டும். இந்த வழக்​கில் 2 நீதிப​தி​கள் மட்​டுமே விசா​ரித்​துள்​ளனர். இதுவே தவறானது. உச்ச நீதி​மன்​றம் என்​றாலும், ஆளுநர் என்​றாலும், மத்​திய, மாநில அரசுகள் என்​றாலும் அவர​வருக்கு என்​னென்ன அதி​காரம் உள்​ளதோ அந்த அதி​கார வரம்பை மீறியோ, தாண்​டியோ செயல்​படக்​கூ​டாது. உச்​சபட்ச அதி​காரம் கொண்ட அமைப்பு என்​றாலும் எதேச்​சை​யான அதி​காரத்​துடன் உச்ச நீதி​மன்​றம் செயல்பட முடி​யாது. அப்​படி மீறி செயல்​பட்​டால் அது ஆபத்​தில்​தான் முடி​யும்.

இந்த வழக்கை பொறுத்​தமட்​டில் ஆளுநரின் செயல்​பாடு​களி்ல் தவறு இருக்​கிறது என சுட்​டிக்​காட்ட உச்ச நீதி​மன்​றத்​துக்கு எந்த தடை​யும் கிடை​யாது. ஆனால், அதே​நேரம் ஆளுநருக்​குரிய அதி​காரத்தை கையில் எடுத்​துக்​கொண்டு நாங்​களே உத்​தரவு பிறப்​பிக்​கிறோம் என உச்ச நீதி​மன்​றம் கூறு​வது​தான் தவறு. அரசி​யலமைப்​பு சட்​டத்​தி​லும் அதற்கு இடம் கிடை​யாது.

ஜனநாயகத்​துக்கு விரோத​மாகவோ அல்​லது பொது​மக்​களின் நலனுக்கு எதி​ராகவோ மாநில அரசு சட்​டம் இயற்​றுகிறது என்​றால் அதற்கு ஆளுநர் ஒப்​புதல் அளி்த்​து​தான் தீர வேண்​டு​மா? பல்​கலைக்​கழக துணைவேந்​தர் பதவிக்கு திறமை​யான, தகு​தி​யான நபர்​களை கண்​டறிந்து அரசி​யல் சாயம் இல்​லாமல் கல்​வி​யாளர்​களை பதவி​யில் அமர்த்த வேண்​டும் என்ற நல்ல நோக்​கில்​தான் ஆளுநர்​களே வேந்​தர்​களாக பத​வி​யில் உள்​ளனர். அது​வும் தவறு என்​றால் இந்த தீர்ப்பை எப்​படி உற்​று​நோக்​கு​வது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்