கோவையில் அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

By இல.ராஜகோபால்

கோவை: கோவை ஜிவி ரெசிடென்சி, மசக்காளிபாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் நேரு, அவரது மகன் மற்றும் அவருடைய சகோதரர்களுக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ஜிவி ரெசிடென்சி, மசக்காளிபாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீடு அமைந்துள்ள டிவிஹெச் ஏகாந்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள் குழுவினர் மூன்று வாகனங்களில் வந்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்டவை நடந்துள்ளதா என தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்