ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 06 அன்று தொடங்கி வைக்க உள்ள ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான தினசரி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ராமநவமி நாளான ஏப்ரல் 06 அன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதுடன், ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைக்கின்றார். இந்த புதிய ரயில் சேவையின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயில் எண் 16104 தினசரி பிற்பகல் 03.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக அதிகாலை 03.10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.
» ‘கடும் சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக முயற்சி’ - வேல்முருகன்
» சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: ராமதாஸ்
அதுபோல, ரயில் எஸ் 16104 தினசரி மாலை 06.05 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அதிகாலை 05.45 மணியளவில் ராமேசுவரம் வந்தடையும்.
பாம்பனில் ரயில் நிற்க கோரிக்கை: “புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் கோரிக்கையான பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் வரையிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு விட்டு வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வது வேதனைக்குரிய விஷயம். ஆண்டிற்கு 55 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் பாம்பன் ரயில் நிலையத்தில் பாம்பன் எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும்” என ராமேசுவரம் தீவு ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ராமேசுவரம் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை தாம்பரம், திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து மண்டபத்துக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த விழாவில் 6 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் பங்கேற்க உள்ளதாக ரயில்வே வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago