காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

By டி.செல்வகுமார் 


சென்னை: காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு, 2021-22-ல் ரூ.146.57 கோடி ஒதுக்கி, அதில் ரூ.116.22 செலவிடப்பட்டு 47 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்தது. 2022-23 மற்றும் 2023-24-ல் ரூ.176.52 கோடி ஒதுக்கி, அதில் ரூ.128.51 கோடி செலவிடப்பட்டு 86 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்துள்ளது. 2024-25-ல் ரூ.50.50 கோடி ஒதுக்கீடு செய்து, தற்போது வரை ரூ.33.48 கோடி செலவிடப்பட்டு 89 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்து, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, என்று பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக அதிமுக உறுப்பினர், சி.விஜயபாஸ்கர் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசியதாவது: “2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்தார். காவிரி வெள்ள நீரை வறட்சி பாதித்த மாவட்டங்களில் பயன்படுத்துவதற்கான இந்த இணைப்புக் கால்வாய் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டம் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.450 கி.மீ., இரண்டாம் கட்டம் தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 109.695 கி.மீ., மூன்றாம் கட்டம் வைகை முதல் குண்டாறு வரை 34.045 கி.மீ. ஆக மொத்தம் 262.190 கிலோ மீட்டர் தூரம் வெள்ளநீர் இணைப்புக் கால்வாய் அமைக்கப்படும்.

அதன்பிறகு முதல் கட்டத்தில் 45,876 ஏக்கர், இரண்டாம் கட்டத்தில் 66,356 ஏக்கர், மூன்றாம் கட்டத்தில் 16,258 ஏக்கர் பாசன நிலங்கள் மேம்படுத்தப்படும். முதல் கட்டமாக மாயனூர் (கட்டளை) முதல் தெற்கு வெள்ளாறு (கவிநாடு மேற்கு) வரை 118.45 கி.மீ நீளத்துக்கு 8 பாகங்களாகப் பிரித்து செயல்படுத்த ரூ.6,941 கோடிக்கு கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலமெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் 427.81 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 36.21 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யவும், திருச்சி மாவட்டத்தில், 200.41 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 18.62 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களை நில மாற்றம் செய்யவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 608.03 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 103.51 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலமெடுப்பைப் பொருத்தவரை 85 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. கால்வாய் அமைக்கும் பணிக்காக கரூர் மாவட்டம், நெடுகை 0 கிலோ மீட்டரில் இருந்து நெடுகை 4.100 கி.மீ வரையிலும், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நெடுகை 54.695 முதல் நெடுகை 60.050 வரையிலான பகுதிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இப்பணிக்கு 2021-22-ல் ரூ.146.57 கோடி ஒதுக்கி, அதில் ரூ.116.22 செலவிடப்பட்டு 47 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்தது. 2022-23 மற்றும் 2023-24-ல் ரூ.176.52 கோடி ஒதுக்கி, அதில் ரூ.128.51 கோடி செலவிடப்பட்டு 86 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்துள்ளது. 2024-25-ல் ரூ.50.50 கோடி ஒதுக்கீடு செய்து, தற்போது வரை ரூ.33.48 கோடி செலவிடப்பட்டு 89 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்து, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது பணிகள் நடைபெறும் பகுதிகள் தவிர நிலமெடுப்புப் பணிகள் 96 சதவீதம் முடிவுற்ற கரூர், திருச்சி மாவட்டங்களில் நெடுகை 4.100 கி.மீ. முதல் 54.695 வரை 8 பகுதிகளாக பிரித்து ரூ.3,076.32 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது, என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்