வேங்கைவயல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி 

By கி.மகாராஜன் 


மதுரை: வேங்கைவயல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த விசாரனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்ற மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி, “வேங்கைவயல் சம்பவத்துக்கு காரணம் இரு தனிநபர்களுக்கு இடையேயான பிரச்சினையே எனவும் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விபரங்களும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து உண்மை தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.” என்றும் வாதிட்டிருந்தார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (ஏப்.1) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து காவல்துறை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை, எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்