மெட்ரோ ரயில் பழைய பயண அட்​டை​யை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு

By மு.வேல்சங்கர்

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகள் ஏப்.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) மாற வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயி​லில் டிக்​கெட் எடுப்​ப​தற்​காக கவுன்ட்​டர்களில் பயணி​கள் வரிசை​யில் நெடுநேரம் காத்​திருப்​பதை தவிர்க்க, சிஎம்​ஆர்​எல் பயண அட்டை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்​தப்​பட்​டது. 5 ஆண்டுகள் வரை செல்​லுபடி​யாகும் இந்த அட்​டையை பயன்​படுத்​தும்​போது, 20 சதவீதம் கட்டண தள்​ளு​படி கிடைக்​கும்.

இதனிடையே, தேசிய பொது போக்​கு​வரத்து அட்​டையை (சிங்​கார சென்னை அட்​டை) மெட்ரோ ரயில் நிறு​வனம் 2023-ம் ஆண்டு ஏப்​.14-ம் தேதி அறி​முகப்​படுத்​தி​யது. இந்​நிலை​யில், எஸ்​பிஐ வழங்​கிய சிங்​கார சென்னை அட்​டைக்கு ஏப்​.1-ம் தேதி முதல் முழு​மை​யாக மாற திட்​ட​மிடப்​பட்​டது.

இதைத் தொடர்ந்​து, 41 மெட்ரோ ரயில் நிலை​யங்​களி​லும் படிப்​படி​யாக சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் பயண அட்​டைகளை ரீசார்ஜ் செய்​யும் வசதி நிறுத்​தப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, பயண அட்​டை​யில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்​களில் பயணிப்​ப​தற்​கும், மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் வாக​னம் நிறுத்​து​வதற்​கும் பயணி​கள் பயன்​படுத்தி வந்​தனர்.

இந்​நிலை​யில், மெட்ரோ ரயில் பயண அட்டை இன்​று​முதல் முழு​மை​யாக மாற இருப்​பதை கருத்​தில்​கொண்​டு, ஆலந்​தூர் உட்பட பல்​வேறு மெட்ரோ ரயில் நிலைய கவுன்ட்​டர்​களில் பயண அட்​டை​யில் உள்ள மீதித் தொகை திருப்​பித் தரு​மாறு பயணி​கள் கேட்டனர். ஆனால், பழைய அட்​டை​யில் உள்ள தொகையை பயணம் மேற்​கொண்டு கழிக்​கு​மாறு ஊழியர்​கள் பதிலளித்​தனர். இதனால், பயணி​களுக்​கும் ஊழியர்​களுக்​கும் இடையே கடுமையான வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

இதுகுறித்​து, பயணி​கள் கூறிய​தாவது: மெட்ரோ ரயில் பயண அட்​டை​யில் ரூ.2 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்து வைத்​துள்​ளோம். ஏப்​.1-ல் இருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு மாற வேண்​டும் என தெரி​வித்​தனர். மெட்ரோ ரயில் பயண அட்​டையை தேவைப்​படும் போது மட்​டுமே பயன்​படுத்​துகிறோம்.

தற்​போது இந்த அட்​டை​யில் ரூ.1,000-க்​கும் மேல் மீதித் தொகை உள்​ளது. எனவே, இத்​தொகையை திருப்பி தர வேண்​டும் அல்​லது சிங்​கார சென்னை அட்​டைக்கு இத்​தொகையை ​மாற்​றம் செய்ய வேண்​டும். இல்​லா​விட்​டால், பயண அட்​டை​யில் பூஜ்ஜி​யம் என்ற நிலைக்கு வந்த பிறகு, சிங்​கார சென்​னைக்கு அட்​டைக்கு மாற்ற வேண்​டும். அது​வரை, மெட்ரோ ரயில் பயண அட்​டையை பயன்​படுத்த அனும​திக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

மேலும் 2 மாதம் செல்லுபடியாகும்: இதுகுறித்​து, மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “சிங்​கார சென்னை அட்டைக்கு மாற பயணி​களை ஊக்​கப்​படுத்​துகிறோம். இந்த பயண அட்​டை​யில் தொகை பூஜ்ஜி​யம் நிலைக்கு வந்​த​பிறகு, அவர்​களுக்கு ரீசார்ஜ் செய்​யாமல், அதற்கு பதிலாக சிங்​கார சென்னை அட்டை வழங்​கப்​படு​கிறது.

மேலும், மெட்ரோ ரயில் பயண அட்​டையை நிறுத்தி வைக்​க​வில்​லை. மாறாக, படிப்​படி​யாக மாற்ற திட்​ட​மிட்டு உள்​ளோம். எனவே, பழைய பயண அட்​டை​யில் இருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு மாற, மேலும்​ 2 மாதங்​கள்​ வரை கால நீட்​டிப்​பு செய்​யப்​படும்​” என்​றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்