சென்னையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் ரம்​ஜான் பண்​டிகை கோலாகல​மாக நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி நடந்த சிறப்பு தொழுகை​யின்​போது இஸ்​லாமியர்​கள் ஒரு​வரையொரு​வர் ஆரத்​தழுவி வாழ்த்​துகளை பரி​மாறிக் கொண்​டனர்.

இஸ்​லாமியர்​களின் புனித மாத​மாக ரமலான் கருதப்​படு​கிறது. இந்த மாதத்​தில்​தான் இஸ்​லாமியர்​களின் முக்​கிய​மான 5 கடமை​களில் ஒன்​றான நோன்பு நோற்​பது கடைபிடிக்​கப்​படு​கிறது. ஆண்​டு​தோறும் ரமலான் பிறைதொடங்​கிய நாளில் இருந்து இஸ்​லாமியர்​கள் நோன்பு தொடங்​கு​வர்.

இந்த ஆண்டு ரம்​ஜான் நோன்​பு, கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்​கியது.நோன்பு காலம் முடிந்த நிலை​யில், நேற்று முன்​தினம் பிறை தென்​பட்​ட​தால், தமிழகத்​தில் ரம்​ஜான் பண்​டிகை நேற்று கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி மைதானத்​தில் தமிழ்​நாடு முஸ்​லிம் முன்​னேற்​றக் கழகத்​தின் மார்க்​கப் பிரி​வான இஸ்​லாமிய பிரச்​சா​ரப் பேரவை சார்​பில் ரம்​ஜான் பெரு​நாள் சிறப்பு கூட்​டுத் தொழுகை நடை​பெற்​றது.

இனிப்பு வழங்கி மகிழ்ச்சி: இந்த சிறப்பு கூட்​டுத் தொழுகை​யில், தமு​முக தலை​வர் எம்​.ஹெச்​. ஜ​வாஹிருல்லா எம்​எல்ஏ, கலந்து கொண்டு தொழுகை உரை நிகழ்த்​தி​னார். இதில் ஆயிரக்​கணக்​கான இஸ்​லாமியர்​கள் புத்​தாடை அணிந்து கலந்து கொண்​டனர். கூட்​டுத் தொழுகை முடிவடைந்​ததும் இஸ்​லாமியர்​கள் ஒரு​வரையொரு​வர் ஆரத்​தழுவி ரம்​ஜான் வாழ்த்​துகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்​னர், இனிப்​பு​கள் வழங்கி மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். இதே​போல, தமிழ்​நாடு தவ்​ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்​டம் சார்​பில் மண்​ணடி அரண்​மனைக்​காரன் தெரு பின்னி கார் பார்க் வளாகத்​தில் நோன்பு பெரு​நாள் தொழுகை நடை​பெற்​றது.

இதில் மாநில செய​லா​ளர் சபீர் அலி கலந்து கொண்டு பெரு​நாள் உரை​யாற்​றி​னார். மேலும், சென்னை ராயப்​பேட்டை ஒய்​எம்​சிஏ மைதானம், திரு​வல்​லிக்​கேணி பெரிய பள்​ளி​வாசல், பெரியமேடு பள்​ளி​வாசல், மண்​ணடி ஈத்​கா, ஆயிரம்​விளக்கு மசூதி உட்பட சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​யில் பல்​வேறு இடங்​களி​லும் ரம்​ஜான் பண்​டிகை​யையொட்டி நேற்று கூட்​டுத் தொழுகை நடை​பெற்​றது.

பள்ளி வாசல்​கள் முன்பு கூடி​யிருந்த ஏழைகளுக்கு முஸ்​லிம்​கள் புத்​தாடை, உணவு வழங்​கினர். ஒரு சில இடங்​களில் அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது. ரம்​ஜான் தொழுகை நடை​பெற்ற அனைத்து இடங்​களி​லும் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்பட்டிருந்தது.

தலைவர்கள் வாழ்த்து: ரம்​ஜான் பண்​டிகை​யை யொட்டி பாஜக மாநில தலை​வர் அண்​ணா​மலை, முன்​னாள் பாஜக மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன். தவெக தலை​வர் விஜய் ஆகியோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்