பாஜக பக்கம் சாய்ந்த அதிமுக...  என்ன செய்யப் போகிறது தவெக..?

By வீரமணி சுந்தரசோழன்

அதிமுக-வுடன் கூட்டணி, 50 ப்ளஸ் தொகுதிகள், துணை முதல்வர் பதவி, தமிழகத்தின் பவன் கல்யாண் என்றெல்லாம் தவெக பற்றி வலம் வந்த யூகங்கள் எல்லாம் சுக்கு நூறாகியிருக்கிறது. மீண்டும் பாஜக-வுடன் கைகோக்க தயாராகிவிட்டது அதிமுக. அப்படியானால் தவெக இனி என்ன செய்யும்? ​பாசிச கட்சி என பாஜக-வை​யும், பாயாச கட்சி என திமுக-வையும் குறிவைத்து தாக்கி வருகிறார் விஜய்.

அதேசமயம், அதிமுக-வை பற்றியோ, அதன் கடந்த கால ஆட்சி பற்றியோ விஜய் மூச்சு​விட​வில்லை. இதனால் அவர், அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க திட்ட​மிடுவதாக செய்திகள் கசிந்தன. இதை உறுதிப்​படுத்தும் வகையில் இரு தரப்புக்கும் இடையில் ரகசிய பேச்சு​வார்த்​தைகளும் நடந்தன.

தவெக-வின் பெரும்​பாலான மாவட்டச் செயலா​ளர்கள் ரசிகர் மன்றத்​தி​லிருந்து வந்தவர்கள். எனவே, 2026-ல் அதிமுக-வுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்​தால், கணிசமான தொகுதி​களும் கிடைக்​கும், நம்மவர்​களுக்கும் அரசியல் அனுபவம் கிடைக்கும் என்பதே தவெக-​வினரின் எண்ணவோட்டமாக இருந்தது.

அதிமுக-வும் தவெக-வை சேர்த்​துக்​ கொண்டு தேர்தலை சந்திக்​கலாம் என்ற மனநிலை​யிலேயே இருந்தது. எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் ஆதவ் அர்ஜுனா தவெக-வுக்குள் வந்தார். அதோடு பிரசாந்த் கிஷோரையும் கொண்டு​வந்தார்.

தவெக-வின் 2-ம் ஆண்டு விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், “விஜய் அதிமுக-வுடன் கூட்டணி அமைக்​காமல் தனித்தே போட்டியிடு​வார். அவர் 2026-ல் தனிப்​பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி​யமைப்​பார்” என்று பற்றவைத்​தார். ஆனால், அது தவெக-வின் கருத்தல்ல என அவசரமாக மறுக்​கப்​பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுக-​விடம் சரிபாதி தொகுதிகள், ஆட்சியில் சரிபாதி பங்கு என நடைமுறை சாத்தி​யமில்லாத கோரிக்​கைகளை தவெக வைத்தது. இதில் ஜெர்க்கான அதிமுக, தனது ரூட்டையே மாற்றி​விட்டது. 2026-ல் பாஜக, பாமக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய பலமான கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் அதிமுக இப்போது இருக்​கிறது.

இந்த நிலையில், விஜய் எப்படி 2026 தேர்தலை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்​துள்ளது. தொடக்​கத்தில் விஜய், திமுக கூட்ட​ணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட்​டுகளை இழுத்து கூட்டணி அமைக்க காய் நகர்த்​தி​னார், அது நடக்க​வில்லை. அடுத்து, அதிமுக கூட்டணி வாய்ப்பும் போய்விட்டது. இனி விஜய் பக்கம் உள்ள ஒரே வாய்ப்பு சீமான் தான்.

ஆனால் சீமானும் சமீபமாக பெரியார் பேரைச் சொல்லி விஜய்யை கடுமையாக விமர்​சிக்​கி​றார். இருப்​பினும் ஒருவழியாக தவெக - நாதக கூட்டணியை அமைக்க முயற்​சிகள் நடப்பதாக சொல்லப்​படு​கிறது. அதுவும் நடக்க​வில்லை என்றால், வேறு வழியே இல்லாமல் 234 தொகுதி​களிலும் தவெக தனித்தே போட்டி​யிட்டு ஆகவேண்​டும்.

பாஜக-வையும் இணைத்து அதிமுக உருவாக்கும் கூட்ட​ணியால் தவெக-வுக்கு ஒரு நன்மையும் கிடைத்​துள்ளது. அதாவது திமுக, பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள சிறுபான்​மை​யினர் மற்றும் அரசு ஊழியர்கள், இளைஞர்கள் வாக்குகள் விஜய்க்கு கிடைக்​கலாம். ஆனால், அது வெற்றி​பெறும் அளவுக்கு இருக்குமா என்பதுதான் கேள்வி.

இதுகுறித்து பேசிய தவெக நிர்வாகிகள், “அதிமுக-வுடன் நாங்கள் கூட்டணி பேசியதாக எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதேசமயம், தமிழகத்தில் மாற்றத்துக்கான ஆட்சியை உருவாக்க வலுவான கூட்டணி அமைக்கும் முன்னெடுப்புகளும் நடந்து வருகின்றன.

தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடவும் நாங்கள் தயார்தான். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அதற்குள் காட்சிகள் மாறும், பொறுத்திருந்து பாருங்கள்” என்கின்றனர். எது எப்படியோ, ‘சேஃப் ஸோனில்’ இருந்த விஜய் ‘கொந்​தளிப்பான சூழலை’ நோக்கி தள்ளப்​பட்​டுள்​ளார். பலமான திமுக, அதிமுக கூட்​ட​ணிகளை சமாளிக்க என்ன வியூகம் வகுக்​கிறார் என பொறுத்​திருந்து பார்​க்​கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்