சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரம்ஜான், புனித வெள்ளி அன்று மதுக்கடை களை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் மிகக் குறைந்தஅளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக் கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தர விடும் தமிழக அரசு, அவர்களைவிட பெரும்பான்மை சமயத்தினரான கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.
குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், சிலருக்கு எதிராகவும் அரசு செயல்படுவது சிறிதும் அறமற்றது. எனவே கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் புனித வெள்ளி, ரம்ஜான் பண்டிகை அன்று, தமிழகம்முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும். இதற்கான அரசாணையை நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago