மேய்க்கால் புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகரப் பகு​தி​களில் உள்ள மேய்க்​கால் புறம்​போக்கு இடங்​களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சட்​டப்​பேர​வை​யில் நேற்று இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​தில் காங்​கிரஸ் எம்​எல்ஏ அசன் மவுலானா (வேளச்​சேரி) பேசும்​போது, “சென்னை மற்​றும் சுற்றுப்​புற பகு​தி​களில் உள்ள சில இடங்​கள், மேய்க்​கால் புறம்​போக்கு நிலங்​களாக வரையறை செய்​யப்​படு​வ​தால், அவற்​றுக்கு பட்டாக்​கள் பெறு​வ​தில் சிக்​கல்​கள் ஏற்​படு​கின்​றன.

இந்த விவ​காரத்​தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார். அதற்கு பதிலளித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசும்​போது, “சென்​னையை சுற்​றி​யுள்ள காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் ஆகிய மாவட்​டங்​களின் எல்​லைப் பகு​தி​களில் இந்த பட்டா பிரச்​சினை​கள் நில​வு​கின்​றன. இதி​லுள்ள சிக்​கல்​களை சரிசெய்​து, அனை​வருக்​கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்