எம் சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எவ.வேலு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) பேசும்போது, ‘‘அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய உள்ளாட்சி அமைப்புகள் இருப்பது அவசியமாகும். எனவே, உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. இதனால் அத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதில்லை. அதேபோல், எம் சான்ட், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் குவாரிகள் டெண்டர் எடுத்தபோது குறிப்பிட்ட தொகையைவிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் ஒ.எஸ்.மணியன் (அதிமுக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்) ஆகியோரும் பேசினர். இதற்கு அமைச்சர் எவ.வேலு பதிலளித்து பேசும்போது, ‘‘இதுதொடர்பான புகார்கள் ஏற்கெனவே அரசின் கவனத்துக்கு வரப்பெற்றுள்ளன. டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago