சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 36 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் கே.சாந்தகுமாரி. இவர் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் நடந்த அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலில் அகில இந்திய தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு இந்த கூட்டமைப்பின் அகில இந்திய தலைவராக பதவி வகித்துள்ளார்.
தவிர சர்வதேச பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மண்டல துணைத்தலைவராகவும் சாந்தகுமாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும், உயர் நீதிமன்ற மதுரை கிளை பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகவும் உள்ள ஜ.ஆனந்தவள்ளி, அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் செயலாளராக இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு தமிழக பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டாக தேர்வு செய்யப்பட்டு இருப்பது முதன்முறை என்பதால் அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 secs ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago