சென்னை | கிரிக்கெட் பார்த்துவிட்டு பைக்கில் திரும்பிய 2 பேர் தூணில் மோதி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மெட்ரோ ரயில் தூணில் இருசக்கர வாக​னம் மோதிய விபத்​தில் மாணவர்​கள் இரு​வர் உயி​ரிழந்​தனர். சென்னை ராமாபுரத்​தைச் சேர்ந்​தவர் கெல்​வின் கென்னி ஜெயன் (21). இவர் சென்​னை​யில் உள்ள கல்​லூரி ஒன்​றில் 2-ம் ஆண்டு பட்​டப்​படிப்பு படித்து வந்​தார். இவரது நண்​பர் சித்​தார்த் (20). சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் முதலா​மாண்டு படித்து வந்​தார். இரு​வரும், சென்னை சேப்​பாக்​கத்​தில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற கிரிக்​கெட் போட்​டியை காணச் சென்​றனர்.

இதற்​காக தங்​களது இருசக்கர வாக​னத்தை ஆலந்​தூர் மெட்ரோ ரயில் நிலை​யத்​தில் நிறுத்​தி​விட்டு ரயில் மூலம் சென்​றனர். பின்​னர் போட்டி முடிந்து மீண்​டும் ரயில் நிலை​யம் வந்த அவர்​கள், தங்​களது இருசக்கர வாக​னத்தை எடுத்​துக் கொண்டு மீனம்​பாக்​கம் சென்​றனர். அங்கு ஹோட்​டலில் சாப்​பிட்​டு​விட்டு ராமாபுரம் நோக்கி புறப்​பட்​டனர்.

அப்​போது ஆலந்​தூர் ஜிஎஸ்டி சாலை ஆசர்​கானா வளைவில் வந்​த​போது இருசக்கர வாக​னம் வேக​மாக சென்​ற​தாக கூறப்​படு​கிறது. இதனால் திடீரென கட்​டுப்​பாட்டை இழந்த வாக​னம் தாறு​மாறாக ஓடி மெட்ரோ ரயில் தூண் மீது மோதி​யுள்​ளது. இதில், 2 பேரும் தூக்கி வீசப்​பட்டு சம்பவ இடத்​திலேயே இறந்​தனர். தகவல் அறிந்து பரங்​கிமலை போக்​கு​வரத்து புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் வந்து உடல்​களை மீட்​டு, குரோம்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்