சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40, காலை 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு அதே தேதிகளில் காலை 10.30, முற்பகல் 11.35, மதியம் 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு அதே தேதிகளில் நண்பகல் 12.40, பிற்பகல் 2.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு அதே தேதிகளில் பிற்பகல் 2.30, 3.15, மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்டை - நெல்லூருக்கு காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு அதே தேதிகளில் மதியம் 1.00, பிற்பகல் 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு அதே தேதிகளில் நண்பகல் 12.35, மதியம் 1.15, பிற்பகல் 3.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
பகுதி ரத்து: செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. கும்மிடிப்பூண்டி - தாம்பரத்துக்கு அதேநாட்களில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
» சவுக்கு சங்கர் வீட்டுக்குள் அத்துமீறல்: இபிஎஸ், அண்ணாமலை, திருமாவளவன், வைகோ கண்டனம்
» ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பு இல்லை - டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு பதிலாக, அதேநாட்களில், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, சென்னை - எண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago