மரக்கிளைகளை வெட்ட ஆட்கள் இல்லை - மதுரையில் சாலைகளில் விழும் மரங்களால் அடிக்கடி மின்தடை!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை சாலையோரங்களில் உள்ள பழமையான மரங்கள், அதன் கிளைகள், ஒடிந்து விழக்கூடிய அபாயகரமான மரங்கள் காற்றில், மழையில் ஒடிந்து மின்வயர்கள் மீது விழுந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றன. இந்த மரங்களை அப்புறப்படுத்த மின்வாரியத்தில் ஆட்கள் இல்லாததால் மரங்களை வெட்டவதற்கும், அவற்றை அப்புறப்படுத்துவதற்கும், மாநகராட்சிக்கும், மின்சார வாரியத்திற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மதுரை 3,500 ஆண்டிற்கு முன்பே உருவான பழமையான நகரம். இந்த நகரத்தில் உள்ள மாநகராட்சி சாலைகள், மாநில நெடுஞ்சாலைத்துறை சாலைகள் அனைத்தும் குறுகலாக உள்ளன. இந்த சாலையோரங்களில் கடந்த காலத்தில் நிழல் தருவதற்காக மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு வகை மரங்களை நட்டுள்ளன. இந்த மரங்கள், தற்போது மிக பழமையான மரங்களாக காற்றும், மழைக்கும் எந்த நேரத்திலும் ஒடிந்து விழக்கூடிய வகையில் அபாயகரமானநிலையில் உள்ளன. சில மரங்கள், பச்சை மரங்களாக நின்றாலும், அவை இலேசான காற்றும், மழைக்கும் கீழே விழுகின்றன.

இந்த மரங்கள், அதன் கிளைகள் மாநரச் சாலைகளில் மழைக்கும், காற்றுக்கும் சாலையின் குறுக்கே ஒடிந்து விழுந்து விடுகின்றன. மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக மரம் விழுந்த இடத்திற்கு வந்து அப்பகுதி குடியிருப்புகளுக்கு செல்லும் டிரான்பார்மர் அல்லது சம்பந்தப்பட்ட மின்கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து உடனடியாக மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்படியும், அதன்பிறகே மின் இணைப்பு வழங்க முடியும் என்றும் அப்பகுதி குடியிருப்பு மக்களை அறிவுறுத்றுகிறார்கள். ஆனால், தற்போது இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு நகர்ப்புறங்களில் தொழிலாளர்கள் உடனடியாக கிடைப்பதில்லை.

மின்வாரிய ஊழியர்கள் இதுபோன்ற அவசர காலங்களில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்காக தங்கள் கைவசம், அழகர் கோவில் கடச்சனேந்தல், துவரிமான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் போன்ற புறநகர் கிராமங்களைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்களை தொடர்பில் வைத்துள்ளார்கள். அவர்களுடைய தொலைபேசி எண்களை, மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள். அவர்கள், அந்த மரம் வெட்டும் தொழிலாளர்களிடம் பேரம் பேசி மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியபிறகு, மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் வந்து மின்வயர்களை ஒழுங்குப்படுத்தி மின் இணைப்பு வழங்குகிறார்கள். ஆனால், பொதுமக்கள், மரங்களை வெட்டுவதற்கு பணம் கொடுக்க மறுக்கும்பட்சத்தில் இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது யார் என்ற சவாலும், நெருக்கடியும் ஏற்படுகிறது.

இது தொடர்பாக மின்வாரிய ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. மாநகராட்சி, மின்வாரியத்தில் மரம் வெட்டுவதற்கான தனியாக தொழிலாளர்கள் இல்லாததால் பொதுமக்களே மரங்களை வெட்டும் பொறுப்பை ஏற்க வேண்டிய உள்ளது. அதனால், சாலையோரம் இதுபோன்ற நொடிந்து விழும் அபாயநிலையில் உள்ள மரங்கள் அப்பறப்படுத்துவதில்லை. மழை, காற்றில் விழுந்து மின்தடை ஏற்படுட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும்போது மட்டுமே சாலையில் விழும் மரங்கள் அப்புறப்படுத்துகின்றன.

சாலையோரம் மரங்களை வையுங்கள் என்று விழிப்புணர்வு செய்யும் அரசு அமைப்புகள், அவை பழுமையாகி வலுவிழுந்து கீழே அபாயத்தில் இருந்தால் கூட அதனை வெட்டி அகற்றவதற்கான பொறுப்மை மட்டும் தாங்கள் எடுத்துக் கொள்வதில்லை. அநேரேத்தில் இதுபோன்ற மரங்களை பொதுமக்களும் நினைத்தால் உடனடியாக அகற்றவிட முடியாது. கிராம நிர்வாக அலுவலர், மாநகராட்சி, மின்வாரியத்திடம் அனுமதி பெற்றபிறகே அனுமதி பெற வேண்டிய உள்ளது. அதனால், பொதுமக்களும், மரங்கள் விழுவதற்கு முன்பே அகற்ற முன்வருவதில்லை.

மழை, காற்று நேரங்களில் சாலையோர மரங்கள் விழுந்து சாலையில் சென்ற வாகனகள் சேதமடைவது, மின்சாரம் பாய்ந்து மக்கள் உயிரிழப்பு சம்பவங்கள் ஆங்கொன்றும், இங்கொன்றுமாக ஆங்காங்கே நடக்கின்றன. நேற்று முன்தினம் கூட, மதுரை கன்னனேந்தல் பகுதியில் ஒரு இடத்தில் சாலையோரம் மரம் விழுந்து இரவு மின்தடை ஏற்பட்டது. அண்ணாநகர் சுகுனா ஸ்டோர் சந்திப்பு அருகே இடதுறம் யானைக்குழாய் சாலையில் மிக பழமையான சாலையோரம் மரக்கிளை ஒன்று விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுபோன்ற பழமையான பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான மரங்கள், மதுரை அண்ணா நகர் சாலைகளில் உள்ளன. இந்த மரங்களை கணக்கெடுத்து அதன் கிளைகளையும், வலுவிழந்த மரங்களை வெட்டுவதற்கு மின்வாரியத்தில் பிரத்தியேக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், ''மின்சாரம் கண்ணுக்கு தெரியாதது. நொடிகளில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியவை. மின்வாரியம் சார்பில் அடிக்கடி மின்வயர்களுக்கு இடையூறாக மரக்கிளைகளை வெட்டுவோம். இதற்காக தனி கூலியாட்கள் இல்லாவிட்டாலும் மின்ஊழியர்களை வெட்டுவோம். பெரிய மரங்கள், கிளைகள் விழுந்தால் நாங்கள் தீயணைப்பு மீட்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிப்பும். மரத்தை அறுக்கும் இயந்திரங்கள் வைத்திருப்பார்கள். அவர்கள் விரைவாக வந்து அகற்றுவார்கள். அவர்கள் சிறிய மரங்கள், கிளைகள் விழுந்தால் வர முடியாது என்பதால் பொதுமக்கள் உதவியை நாடுகிறோம்,'' என்றனர்.

மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''மரங்களை வெட்டுவதற்கும், அப்புறப்படுத்துவதற்கும் மாநகராட்சியில் இல்லை. இந்த விவகாரம், வருவாய்துறை, மின்வாரியத்துறைக்கு சம்பந்தப்பட்டது,'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்