கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்மப் பொருள்: கடலோர காவல் படையினர் ஆய்வு

By க.ரமேஷ்

கடலூர்: கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளைக் கைப்பற்றி கடலோர காவல் படையினர் ஆய்வு செய்தனர்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கும் வேலங்கிராயன் பேட்டை கடற்கரைக்கும் இடையே கடலில் இன்று ( மார்ச்.24) காலை பெரிய அளவிலான மர்மப் பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதனைப் பார்த்த மீனவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.

இதனைத் தொடர்ந்து புது சத்திரம் போலீஸார், பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மர்ம பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அது கடலில் எல்லைக்காக பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கலாம் அல்லது கப்பலில் மிதக்கும் போயா என்ற பொருளாக இருக்கலாம் என்றும் அந்தப் பொருளில் மாலத்தீவு என்று எழுதப்பட்டுள்ளது என்றும் கப்பலில் இருந்து அறுந்து இது வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். கடலோர காவல் படையினர் அந்த பொருளை கைப்பற்றி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். கடலில் மிதந்து வந்த அந்தப் பொருளை மீனவ கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்