சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பொது போக்குவரத்தாக பேருந்து சேவை திகழ்கிறது. இதன் முக்கிய மைய மாக கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்து வந்தது. இங்கு ஏற்பட்ட நெரிசலின் காரணமாக, வண்டலூர் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலை யம் கட்டி, 2023 டிச.30-ம் தேதி திறக்கப்பட்டது. இங்கிருந்து விரைவு போக்குவரத்து கழக பேருந் துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின் றன .அதாவது, கோயம்பேட்டில் இருந்து இயக் கப்பட்ட பேருந்துகளில் 90 சதவீதம் கிளாம்பாக் கம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, நகர பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து விரைவு பேருந்து களில் ஏறி பயணிக்கின்றனர். இருப்பினும், உடைமை களுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று. அங்கிருந்து விரைவு பேருந்துகளை பிடிப்பதில் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் போதிய இணைப்பு வாகன வசதி இல்லாதது ஆகும். மேலும், ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றில் இப்பேருந்து நிலை யம் செல்ல அதிக கட்டணத்தை செலவிட வேண் டியுள்ளது. இதனால், பாமர, நடுத்தர மக்கள் இந்த பேருந்து நிலையத்தை தவிர்க்கின்றனர்.
மாறாக, ரயில்களில் பயணிக்க முடிவு செய்து, சென்னை எழும்பூர், தாம்பரம் உட்பட முக்கிய ரயில் நிலையங்கள் நோக்கி செல்கின்றனர். இதன் விளை வாக, சென்னை எழும்பூரில் இருந்து தென், மத்திய மாவட்டங்களுக்கு தினசரி மாலை, இரவில் புறப் படும் திருச்செந்தூர், கன்னியாகுமரி, முத்துநகர், பொதிகை, நெல்லை, பாண்டியன், மலைக்கோட்டை உள்ளிட்ட ரயில்களிலும், பகல் நேரத்தில் புறப்படும் வைகை, பல்லவன் உள்ளிட்ட ரயில்களிலும் முன் பதிவு மற்றும் பொது பெட்டிகளில் இடங்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதுபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சேரன், நீலகிரி உட்பட முக்கிய விரைவு ரயில்களிலும் இதே நிலை தான். அதிலும், வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் இந்த ரயில்களின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிபெட்டிகள் மற்றும் ஏசி வகுப்பு தூங் கும் வசதி பெட்டிகளுக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது.
டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக இருந் தாலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங் களுக்கு முக்கிய நாட்களில் புறப்படும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விரைவாக முடிந்து, காத்திருப் போர் பட்டியல் காட்டுகிறது. அதுபோல, தத்கல் டிக் கெட் முன்பதிவும் ஒரு சில நிமிடங்களில் முடிந்து, அதிர்ச்சி அளிக்கிறது. வார இறுதி நாட்களில், முக் கிய விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் ஒருவருக்கு டிக்கெட் கிடைத் தால் கூட, மற்றவர்களை (பெர்த் இல்லாவிட் டாலும்) அழைத்து வந்து தரையில் படுத் தபடி அல்லது ஒரு பெர்த்தில் அமர்ந்த படி பயணிக்கும் நிலை உள்ளது.
» மீண்டும் ஒரு தற்கொலை | ''ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழக அரசு தடை பெறாதது ஏன்?'' - ராமதாஸ் கேள்வி
» “2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியமைக்கும்!” - ராமதாஸ் சிறப்பு நேர்காணல்
இது ஒருபுறம் இருக்க வெளியூரில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி பேருந்துகளில் வருபவர்கள், பரனூர் பொத்தேரி, கூடுவாஞ் சேரி ஆகிய நிறுத்தங் களிலேயே இறங்கி, அங்குள்ள ரயில் நிலை யங்களுக்கு சென்று, அங்கிருந்து மின்சார ரயில்களில் ஏறி, எளிதாகநகருக்குள் பயணிக்கின்றனர். இதன் மூலமாக வீண் அலைச் சல். நேரம். செலவை குறைக்கின்றனர்.
இருமார்க்கமாக, விரைவு மற்றும் மின் சார ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது. 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ரயில்வே தரப் பில் தெரிவிக்கப்படுகிறது. நாள்தோறும் ரயில்களில் பயணிப்போர் அதிகரிப்பதால், அதற்கு ஏற்ப ரயில் சேவைகளை அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சிட்லபாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், "கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்துக்கு சென்று திரும்ப போதிய இணைப்பு வாகன வசதி இல்லை. இந்த பேருந்து நிலையத்துக்கு ஆட்டோ, கார்களில் செல்ல, மக்கள் அதிக கட்டணத்தை செலவிட வேண்டியுள் ளது. இதை தவிர்த்து, ரயில்களை நோக்கி மக் கள் செல்கின்றனர். எனவே, எழும்பூர், தாம்பரத்தில் இருந்து விரைவு ரயில்களின் சேவைகளை அதி கரிக்க வேண்டும். இதுதவிர, தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி பேருந்துகளில் வரும் பயணிகள் முன்ன தாகவே பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி வர வசதியாக, கூடுதல் மின்சார ரயில் சேவையை அதிகாலை முதல் இயக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலர் வரதன் அனந்தப்பன் கூறுகையில், “ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதி கரிக்கும் நிலையில், கூடுதல் ரயில் சேவைகள் வழங்க வேண்டும். மெமு ரயில்களை சென்னை - மதுரை இடையே இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு வரை 4-வது பாதை அமைக்கவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை விரைவாக அமைத்து திறக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,"சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களில் 10 லட்சம் பயணிகளும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களில் 5 லட்சம் பயணி களும் நாள்தோறும் பயணிக்கின்றனர். இந்த மார்க்கங்களில் மின்சார, விரைவு ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை இது. ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந் துள்ளது. பயணிகள் தேவைக்கு ஏற்ப, கூடுதல் ரயில் சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை மே மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago