ஹரியானாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் அர்ச்சகர் படுகாயம் அடைந்தார். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜை சேர்ந்த சுவாமி ஹரி ஓம் தாஸ், ஹரியானாவின் குருஷேத்ராவில் கடந்த 18-ம் தேதி சிறப்பு யாகத்தை தொடங்கினார். இதில் 1,008 அர்ச்சகர்கள் பங்கேற்று யாகம் நடத்தினர். அவர்களுக்கு தரம் குறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின் பாதுகாவலர்களுக்கும் இடையே நேற்று காலை மோதல் ஏற்பட்டது. அப்போது சுமார் 70 அர்ச்சகர்களை, பாதுகாவலர்கள் அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அர்ச்சகர்கள் யாகம் நடைபெற்ற பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள், கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்களை, போலீஸார் அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையில் சுவாமி ஹரி ஓம் தாஸின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஓர் அர்ச்சகர் படுகாயம் அடைந்தார். சுமார் 25-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் காயம் அடைந்தனர். அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
» திமுகவின் தவறுகளை கிராமம்தோறும் கொண்டு சென்று வெளிப்படுத்துவோம்: அமித் ஷா உறுதி
» கூட்டு குழுவின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்: கனிமொழி எம்.பி. தகவல்
இதுகுறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சகர் பிரசாந்த் கூறும்போது, “எங்களுக்கு தரமான உணவு வகைகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது பாதுகாவலர்கள் எங்களை தாக்கினர். ஒரு பாதுகாவலர் 6 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் ஓர் அர்ச்சகரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். யாகத்தை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
சுவாமி ஹரி ஓம் தாஸ் கூறும்போது, “எங்களது யாகத்தை சீர்குலைக்க சிலர் சதி செய்து மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளனர். யார் துப்பாக்கியால் சுட்டனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். போலீஸ் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்" என்று தெரிவித்தார்.
போலீஸார் கூறும்போது, “யாகத்தில் பங்கேற்ற அர்ச்சகர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இதன்காரணமாக சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக குழப்பமான சூழல் நீடித்தது. போலீஸாரின் அதிதீவிர நடவடிக்கைகளால் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago