நியாயமான தொகுதி மறுவரையறை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தொகுதி மறு​வரையறை விவ​காரத்​தில், எந்தச் சூழலிலும் நமது பிர​தி​நி​தித்​து​வம் குறைய கூடாது, குறைய​விட கூடாது என்ற உறு​தி​யோடு போராடு​வோம். நியாய​மான தொகுதி மறு​வரையறை கிடைக்​கும் வரை நாம் இணைந்து ஒற்​றுமை உணர்​வோடு போராடு​வோம் என்று முதல்​வர் ஸ்டா​லின் உறு​திபட தெரி​வித்​தார்.

மக்​களவை தொகுதி மறு​வரையறைக்கு எதி​ராக அமைக்​கப்​பட்​டுள்ள கூட்டு நடவடிக்கை குழு​வின் முதல் ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தொடக்க உரை நிகழ்த்தி முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: இந்​திய அரசி​யல் வரலாற்​றில் ஒரு மாநிலத்​தில் இருக்​கிற, ஆட்சி செய்​கிற ஒரு கட்​சி​யின் அழைப்பை ஏற்று இத்​தனை இயக்​கங்​கள், கட்​சிகள் வந்​திருப்​பது இக்​கூட்​டத்​தின் மாபெரும் சிறப்​பு. நாட்​டில் உள்ள ஒவ்​வொரு மாநில​மும், ஒவ்​வொரு வகை​யில் தனித்​தன்மை கொண்​டது. மாநிலங்​கள் சுயாட்சி தன்​மை​யுடன் செயல்​பட்​டால்​தான் உண்​மை​யான கூட்​டாட்சி உரு​வாக முடி​யும். சிறந்த வளர்ச்​சியை அடைய முடி​யும். அனைத்து தரப்பு மக்​களும் போராடிய​தால்​தான், நாட்​டுக்கு விடு​தலை கிடைத்​தது.

இதை உணர்ந்​து​தான், அரசி​யலமைப்பு சட்​டத்தை வகுத்த மேதைகள், இந்​தி​யாவை கூட்​டாட்சி கொண்ட ஒன்​றிய​மாக கட்​டமைத்​தனர். பல்​வேறு கால​கட்​டங்​களில் இந்த கூட்​டாட்சி தன்​மைக்கு சோதனை வந்​தா​லும், அதை ஜனநாயக அமைப்​பு​கள், இயக்​கங்​கள் தடுத்து வந்​துள்​ளன. அத்​தகைய சோதனை, ஆபத்து இப்​போதும் வந்​துள்​ளது. அதை உணர்ந்​து​தான் நாம் அனை​வரும் கூடி​யிருக்​கிறோம்.

இங்கு இருக்​கும் ஒவ்​வொரு மாநில​மும், மக்​கள்​தொகை கட்​டுப்​பாட்​டின் மூலம் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றத்தை காட்​டி​யுள்​ளன. இத்​தகைய மாநிலங்​களை தண்​டிப்​ப​தாக மத்​திய அரசின் தொகுதி மறு​வரையறை நடவடிக்கை இருக்​கப் போகிறது. அடுத்து நடை​பெற உள்ள மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பின் அடிப்​படை​யில் மக்​களவை தொகு​தி​களை மறு​வரையறை செய்​வது, நம்மை போன்ற மாநிலங்​களை வெகு​வாக பாதிக்​கும்.

மக்​களவை தொகு​தி​களின் எண்​ணிக்​கை​யில் நமது பிர​தி​நி​தித்​து​வத்தை அதி​கம் இழக்க நேரிடும். எனவே​தான் இதை கடுமையாக, ஆணித்​தர​மாக எதிர்க்க வேண்​டிய நிலை​யில் இருக்கிறோம். தற்​போதைய மக்​கள்​தொகை அடிப்​படை​யில் தொகுதி மறு​வரையறை செய்​வதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது என்​ப​தில் நாம் அனை​வரும் உறு​தி​யாக இருக்க வேண்​டும்.

மணிப்​பூர் மாநிலம் 2 ஆண்​டு​களாக பற்றி எரி​கிறது. ஆனால், நீதிக்​கான அவர்​களது குரல்​கள் புறக்​கணிக்​கப்​படு​கின்​றன. ஏனென்​றால் நாட்​டின் கவனத்தை ஈர்க்க அவர்​களுக்கு அரசி​யல் வலிமை இல்​லை. எனவே, மக்​களவை தொகு​தி​களின் எண்​ணிக்கை அல்​லது நமது பிர​தி​நி​தித்​து​வம் குறைவது என்​ப​தை, நமது அரசி​யல் வலிமையை குறைப்பதாகத்​தான் பார்க்க வேண்​டும். தொகுதி எண்​ணிக்கை அல்​லது நமது மாநில பிர​தி​நி​தித்​து​வத்தை குறைக்க அனு​ம​தித்​தால், நம் சொந்த நாட்​டில் நாம் அரசி​யல் அதி​காரம் இழந்த குடிமக்​களாக மாறும் அபா​யம் உள்​ளது.

இது வெறும் எண்​ணிக்கை பற்​றியது மட்​டுமல்ல. இது நமது அதி​காரம், உரிமை​கள், எதிர்​காலம் நலன்​கள் பற்​றியது. பிரதிநிதித்​து​வம் குறைந்​தால், நமது மாநிலங்​கள் நமக்கு தேவை​யான நிதியை பெறு​வதற்​கு​கூட போராட வேண்​டிவரும். எப்​போதும் மாநிலங்​கள், மாநில உரிமை​களை பறிக்​கும் கட்​சி​யாக பாஜக இருந்​துள்​ளது. இதை எந்த மாநில​மும் அனு​ம​திக்க கூடாது. இந்த அச்​சுறுத்​தலை உணர்ந்​து, இது​வரை இல்​லாத ஒற்​றுமை​யுடன் தமிழகம் செயல்​பட்டு வரு​கிறது. இதே​போன்ற ஒற்​றுமையை இந்த அரங்​கில் உள்ள அனைத்து மாநிலங்​களும் காட்ட வேண்​டும்.

நமது இந்த போராட்​டம் தொகுதி மறு​வரையறைக்கு எதி​ரானது அல்ல. தொகுதி மறு​வரையறை நியாய​மாக நடை​பெற வேண்​டும் என்​ப​தையே இந்த போராட்​டம் வலி​யுறுத்​துகிறது. நம்உரிமையை நிலை​நாட்ட தொடர் நடவடிக்கை மேற்​கொள்​வது மிக அவசி​யம். மத்​திய அரசை வலி​யுறுத்​தும் அதே நேரத்​தில், இதுகுறித்து மக்​களிடம் விழிப்​புணர்​வும் ஏற்​படுத்த வேண்​டும். ஒற்​றுமை உணர்​வோடு அனை​வரும் ஒன்​று​பட்டு போராடி​னால்தான் வெற்றி பெற முடி​யும். எந்தசூழலிலும் நமது பிர​தி​நி​தித்​து​வம் குறையக் கூடாது, குறைய​விடகூடாது என்ற உறு​தி​யோடு போராடுவோம். நியாய​மான தொகுதி மறு​வரையறை கிடைக்​கும் வரை நாம் இணைந்து போராடு​வோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்