தமிழகத்துக்கு வட்டி இல்லாத கடனாக ரூ.14,900 கோடி வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​துக்கு கடந்த 4 ஆண்​டு​களில் வட்டி இல்​லாத கடனாக ரூ.14,900 கோடி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய நிதியமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறி​னார்.

சென்னை சிட்​டிசன் ஃபோரம் அமைப்பு சார்​பில், மத்​திய பட்​ஜெட் குறித்த கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: மத்​திய பட்​ஜெட்​டில் தமிழகத்​துக்கு போதிய திட்​டங்​களும், நிதி​யும் ஒதுக்​கப்​பட​வில்லை என குற்​றம் சாட்​டப்​படு​கிறது. கடந்த
10 ஆண்​டு​காலத்​தில் தமிழகத்​துக்கு அதிக நிதி​யும், திட்​டங்​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன. ஜன்​தன் யோஜனா திட்​டத்​தின் மூலம் 1.70 கோடி வங்​கிக் கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றில் 58 சதவீதம் பெண்​கள் பெயரில் தொடங்​கப்​பட்​ட​வை.

பிரதம மந்​திரி அவாஸ் யோஜனா திட்​டம் மூலம் 12 லட்​சம் வீடு​களும், தூய்மை இந்​தியா திட்​டம் மூலம் 59 லட்​சம் கழிப்​பறை​களும் கட்​டப்​பட்​டுள்​ளன. ஜல்​ஜீவன் திட்​டத்​தின் கீழ் 89 லட்​சம் கிராமப்​புற வீடு​களுக்கு குடிநீர் வழங்​கப்​பட்​டுள்​ளது.

பிரதம மந்​திரி உஜ்​வாலா திட்​டத்​தின் கீழ் 41 லட்​சம் சமையல் காஸ் சிலிண்​டர்கள் வழங்​கப்​படு​கின்​றன. ஜன்​அவுஷத் யோஜனா திட்​டம் மூலம் 40 முதல் 60 சதவீதம்குறைந்த விலை​யில் மருந்​து கள்விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. ஆயுஷ்​மான் திட்​டத்​தின் கீழ் 79 லட்​சம் பேருக்​கு, ரூ.5 லட்​சம் மதிப்​பிலான மருத்​து​வக் காப்​பீடுவழங்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 4,100 கி.மீ. தொலை​வுக்கு தேசிய நெடுஞ்​சாலைகள், 1,303 கி.மீ. தொலை​வுக்கு புதி​தாக ரயில் பாதைகள் அமைக்​கப்​பட்​டு, 2,242 கி.மீ. ரயில் பாதைகள் மின் மயமாக்​கப்​பட்​டுள்​ளன.

சேலம், நெய்​வேலி, வேலூரில் உடான் திட்​டத்​தின் கீழ் புதிய விமான நிலை​யங்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. மாநிலங்​களே சொத்​துகளை உரு​வாக்​கும் வகை​யில், 50 வருடங்​களுக்கு வட்டி இல்​லாத கடனாக 4 ஆண்​டு​களில் ரூ14,900 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்​டம் ரூ.63,246 கோடி​யில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இதில் 60 சதவீதம் மத்​திய அரசின் பங்​கு. குஜ​ராத், தமிழகத்​தில் எலெக்ட்​ரானிக் பொருட்​களை உற்​பத்தி செய்​யும் மையங்​கள் தொடங்க ரூ.1,100 கோடி ஒதுக்​கப்பட்​டுள்​ளது. இவ்​வாறு நிர்மலா சீதா​ராமன் தெரி​வித்​தார். நிகழ்ச்​சி​யில், சென்னை சிட்​டிசன் ஃபோரம் அமைப்​பு தலை​வர் கே.டி.​ராகவன், செய​லா​ளர் காயத்ரி பங்​கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்