கோவை ஈஷா கட்டிய கால பைரவர் தகன மேடைக்கு எதிரான வழக்கு - அரசின் நிலைப்பாட்டை கூற ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் தகன மண்டபம் கட்டப்பட்டுள்ள விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா யோகா மையம் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.

இதேபோல அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தவரான முருகம்மாள் உள்ளிட்டோர் ஈஷா யோகா சார்பில் தகன மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மேலும், செம்மேட்டைச் சேர்ந்த சிவஞானன் என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்தாண்டு ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட சிவராத்திரி விழாவின்போது அருகில் உள்ள தனது தோட்டத்துக்குள் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இந்த தகன மேடை உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரிமம் பெற்று முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல பல இடங்களில் மின் தகன மேடைகளை அமைத்து பராமரித்து வருகிறோம், என்றார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். புருஷோத்தமன், மற்ற இடங்களில் ஏற்கெனவே அரசு கட்டியுள்ள தகன மேடைகளை ஈஷா பராமரித்து வருகிறது. ஆனால் இக்கரை போளுவாம்பட்டியில் உள்ள தகன மேடையை ஈஷாவே சொந்தமாக கட்டி இவர்களே பராமரித்து வருகின்றனர். இதற்கு எப்படி தமிழக அரசு அனுமதி வழங்கியது என தெரியவில்லை. குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைப்பகுதிகளிலும் குறிப்பிட்ட தூரத்தை தாண்டியே தகன மேடைகள் அமைக்கப்பட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால் இந்த தகனமேடை குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதிகளிலும், யானை வழித்தட பகுதிகளிலும், பட்டியல் மற்றும் பழங்குடியின வனச்சூழலியல் சட்டத்துக்கு புறம்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க மறுத்து வருகிறது, என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், அரசு மற்றும் தனியார் சார்பில் அமைக்கப்படும் தகன மேடைகளுக்கான விதிமுறைகள் என்ன என்பதையும், ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த மின் தகன மேடை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும் இரு வாரங்களில் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் கோவை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை உதவி இயக்குநர் உள்ளிட்டோரும் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்