தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

By கி.மகாராஜன் 


மதுரை: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சதீஷ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. தமிழகத்தில் கடந்த 1983-ல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் வீடு வீடாக சாதி, பொருளாதாரம், மற்றும் கல்வி தொடர்பான விபரங்களை நூறு சதவீதம் சேகரித்து 1985-ல் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தற்போது தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

இதனால் தமிழக மக்களின் பொருளாதார நிலை, வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு குறித்து ஆய்வு செய்து இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. உச்ச நீதிமன்றத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் சாதி, பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான கணக்கெடுப்பை நடத்துவது இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் அமையும்.

தமிழகத்தில் உள்ள சாதிகள், பழங்குடி இனங்கள், குழுக்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 2020 டிச.21ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையில் 6 மாததில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 2020-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் தமிழகத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு இன்று விசாரித்து, ‘சாதிவாரியான கணக்கெடுப்பு மத்திய அரசுடன் தொடர்புடையது. மேலும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்